Snake Catcher: பாம்பெல்லாம் எனக்கு ஜூஜூபி: மழலையால் மயக்கும் பாம்புபிடி குழந்தை

world’s youngest snake catcher: சீறிப் பாயும் பாம்பையும் சிரித்துக் கொண்டே பிடிக்கும் உலகின் மிகச் சிறிய பாம்பாட்டி சிறுவனின் வைரல் வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 08:33 PM IST
Snake Catcher: பாம்பெல்லாம் எனக்கு ஜூஜூபி: மழலையால் மயக்கும் பாம்புபிடி குழந்தை title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் பாம்பு வீடியோக்கள் சக்கைப்போடு போடுகின்றன என்று சொல்வதுண்டு. ஆனால், சக்கைப்போடு போடும் வீடியோக்களில் இந்த வைரல் வீடியோ மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்.

பாம்பை பாம்பாட்டி பிடிக்கலாம், பெரியவர்கள் பிடிக்கலாம் அல்லது பாம்பு, மனிதரையும் பிடிக்கலாம். ஆனால் 'உலகின் இளைய பாம்பு பிடிக்கும் சிறுவன்' நான் என்று சொல்லாமல் சொல்லும் சிறுவனின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

வைரலான வீடியோவில் பெரிய பாம்பை சுற்றி குட்டியான சுட்டிப் பையன் அமைதியாக நிற்பதை கண்டு நெட்டிசன்களுக்கு வியப்பு தாங்கவில்லை. 

மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

இந்த வீடியோவை @snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. பகிர்ந்த உடனே பலரும் பார்த்து ரசித்து லைக் போட்டு மகிழ்கின்றனர். நீங்களும் இந்த  பாம்பு வீடியோவைப் பாருங்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோலிங் ரீல்களை ரசிப்பவராக இருந்தால்,  பல பாம்பு வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்கவே முடியாது.

இந்த வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பை பிடிக்க முயல்வது சாதாரண விஷயமாக உள்ளது.

மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்

சிறுவன் பாம்பை அதன் வாலைப் பிடித்து இழுப்பதை வீடியோவில் பார்க்கலாம். பாம்பு ஒரு மரத் தூணைச் சுற்றி சுருண்டு கிடப்பதைக் காணலாம், ஆனால் தளிர்நடை போடும் குழந்தை பாம்பை பிடித்து இழுப்பதை விடவில்லை. 

குழந்தை பாம்பை இழுப்பது போல் தோன்றினாலும், பாம்புடன் விளையாடுகிறான் என்றே தோன்றுகிறது. 

இந்த முழு சம்பவமும் நேர்த்தியாக கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த சிறுவனின் வீடியோ பலரின் இதயங்களை வென்றது.  இந்த வீடியோவில் "ஆஸ்திரேலியாவில் இயல்பான நாள்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்த அழகான வைரல் வீடியோவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News