வர்லாம்..வர்லாம் வா...: டிராக்டரின் முன் மாஸ் காட்டும் அம்மா பறவை, வைரல் வீடியோ

Amazing Viral Video: இப்படி ஒரு துணிச்சலா என இணையவாசிகளை வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 01:38 PM IST
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
  • விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வர்லாம்..வர்லாம் வா...: டிராக்டரின் முன் மாஸ் காட்டும் அம்மா பறவை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தாயன்புக்கு ஈடு இணை கிடையாது. மனிதர்கள் மிருகங்கள் என யாராக இருந்தாலும், தாய் தன் குழந்தைகளின் மிகப்பெரிய பாதுகாவலாகவும், சக்தியாகவும், காக்கும் கரமாகவும் இருக்கிறார். பல்வேறு விலங்குகளின் தாயன்பை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. 

தாய் தன் குழந்தையை வழிநடத்துகிறார், ஊக்குவிக்கிறார், பாதுகாக்கிறார், உருவாக்குகிறார், அனைத்து விஷயங்களில் தூணைபுரிகிறார். ஒரு பறவை தான் இட்ட முட்டைகளை டிராக்டரில் இருந்து காப்பாற்றும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. குழந்தைகள் இந்த பூமிக்கு வந்தது முதல் பெற்றோர் அவர்களுக்காகவே வாழத்தொடங்குகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாகும். 

மேலும் படிக்க | சாப்பிட ஏதாச்சும் கேட்டா ஆப்பிள் தராங்க..கடுப்பான நாகப்பாம்பு: வீடியோ வைரல் 

இந்த வீடியோவின் துவக்கத்தில், திறந்தவெளியில் ஒரு பறவை தன் முட்டைகள் முன்னால் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு டிராக்டர் அந்த வழியில் வருகிறது. ஆனால், பறவை அதைப் பார்த்து அச்சப்படவில்லை. அது தன் முட்டைகளுக்கு அருகில் நகர்ந்து செல்கிறது. முட்டைகள் இருக்கும் தன்னுடைய சிறிய கூட்டை அது தனது இறக்கைகளால் மூடி பாதுகாக்க முயல்வதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த பறவையின் முகத்தில் அச்சத்துக்கான அறிகுறியே இல்லை. தன் குழந்தைகளை காக்க வேண்டும் என்ற உறுதியில் தைரியமாக அது டிராக்டரை எதிர்கொள்கிறது.

அம்மா பறவையின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ @ValaAfshar என்ற ட்விட்டர் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். இந்த கிளிப் முதலில் 2019 இல் பகிரப்பட்டது. வீடியோவில், "பறவை தன் முட்டைகளை காக்க, அசையாமல் நிற்கிறது" என தலைப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு பயனர், "வாகனத்தை ஓட்டுபவரும் பறவை மீது மோதாமல் பார்த்து ஓட்டுகிறார். என்ன ஒரு தைரியமான பறவை! என்ன ஒரு நல்ல மனிதர்! உலகம் ஒரு அதிசயம்." என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், "ஒரு தாய் தன் குழந்தைகளைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்" என எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு... பைக்க எங்கெல்லாம் ஓட்டுறாங்க பாருங்க! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News