டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் பறவைகளும், விலங்குகளும் கூட தங்களை அப்டேட் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குரங்கின் வீடியோ வைரலான நிலையில், இப்போது பென்குயின் ஒன்று செல்பி எடுக்கும் வீடியோ முகநூலில் வைரலாகியிருக்கிறது. செல்பி எடுப்பது இப்போது ஒரு மோகமாக மாறிவிட்ட நிலையில், அது உலகின் துருவப் பகுதியில் அமைந்திருக்கும் அண்டார்டிகா வரை பரவிவிட்டது என்பது தான் வேடிக்கை. அதுவும் அங்கிருக்கும் பென் குயின் செல்பி எடுத்திருக்கிறது.
மேலும் படிக்க | குட்டி நாய்க்கும் குரங்குக்கும் செம சண்டை: ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ
antarctica.gov.au என்ற முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருகிகறது. அதில் பென் குயின்கள் கூட்டமாக வந்து கேமரா முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன. இந்த விநோதமான மற்றும் வியப்பான காட்சியை அந்த பக்கத்தில் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளனர். 38 விநாடிகள் மட்டுமே அந்த வீடியோ இருந்தாலும், காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. அண்டார்டிகா என்றாலே துருவப் பகுதி. அங்கு முழுக்க முழுக்க பனிப் பிரதேசம் நிறைந்த நில அமைப்புகள் தான். பனி மலைகள், முகடுகளாக இருக்கும். மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் என்று அறிவியலாளர்களால் கூறப்பட்டிருக்கும் பகுதி.
அந்தப் பகுதியில் பறக்கத் தெரியாத பறவை உயிரினமான பென் குயின்களே அதிகம் இருக்கின்றன. அவற்றுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு என்பது ஏறக்குறைய இல்லை என்று கூட சொல்லலாம். அங்கிருக்கும் பென்குயினர்கள் மனித இனத்தை பார்த்திருக்குமா? என்ற கேள்வி கூட பொதுவெளியில் இருக்கிறது. அந்தளவுக்கு உலகில் மனித இனத்துக்கும் பரீட்சையம் இல்லாத பகுதியில் இருக்கும் இடத்தில் பென்குயின் செல்பி எடுத்திருக்கும் வீடியோ வியப்பை ஏற்படுத்தவில்லை என்றால் தான் ஆச்சரியம். இந்த வீடியோவுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கமெண்ட் அடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | சிறுத்தையை சின்னா பின்னமாக்கி விழுங்கிய மலைப்பாம்பு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ