'Rajini எப்படி அமெரிக்கா சென்றார்?' கஸ்தூரி பரபரப்பு போஸ்ட், ட்ரோல் செய்யும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி மனதில் தோன்றும் கருத்துகளை அச்சமின்றி அப்படியே வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளவர். சமீப காலங்களில் அப்படி பல கருத்துகளை வெளியிட்டு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 04:08 PM IST
  • சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது சிகிச்சைக்காக அம்மெரிக்கா சென்றுள்ளார்.
  • ரஜினிகாந்தால் மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல முடிந்தது? - நடிகை கஸ்தூரி.
  • ரஜினி ரசிகர்கள் பலர் கஸ்தூரியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
'Rajini எப்படி அமெரிக்கா சென்றார்?'  கஸ்தூரி பரபரப்பு போஸ்ட், ட்ரோல் செய்யும் ரஜினி ரசிகர்கள் title=

Kollywood News: தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகையான கஸ்தூரி ஷங்கர் சமூக ஊடகங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருப்பவர். மனதில் தோன்றும் கருத்துகளை அச்சமின்றி அப்படியே வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டுள்ள கஸ்தூரி சமீப காலங்களில் அப்படி பல கருத்துகளை வெளியிட்டு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

தற்போது கஸ்தூரி (Kasthuri)நடிக்கும் ஒரு தொலைக்காட்சித் தொடரின் மூலம் அவர் மக்களுக்கிடையில் அதிக பிரபலமாகி வருகிறார். அவருடைய அதிரடியான நடிப்பின் காரணமாக இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனினும், தற்போது, அவர் மற்றொரு காரணத்திற்காக தலைப்புச்செய்திகளில் உள்ளார். அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) அவரது சிகிச்சைக்காக அம்மெரிக்கா சென்றுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். எனினும், அவரது உடல்நலக் குறைபாடு குறித்தோ, அவருக்கு என்ன சிகிச்சை நடக்கவுள்ளது என்பது குறித்தோ எந்த தகவலும் வெளிவரவில்லை. 

ALSO READ:Rajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி 

இந்த நிலையில், "கடந்த மாதம் முதல் இந்தியர்களால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. நாம் வருவதற்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக கூட பொது மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ரஜினிகாந்தால் மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல முடிந்தது? இந்த இக்கட்டான சமயத்தில் அவர் எவ்வாறு அமெரிக்கா சென்றார்? திடீரென்று அவர் அமெரிக்கா செல்ல என்ன காரணம்?" என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

சமீபத்தில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். தற்போது அவர் திடீரென அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ளது பல கேள்விகள்ளை எழுப்பியுள்ளது. ரஜினி தன் உடல்நிலை குறித்த தெளிவான தகவலை வழங்க வேண்டும் என்றும் கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். 

அவரது ட்வீட்டிற்குப் (Tweet) பிறகு, ரஜினி ரசிகர்கள் பலர் கஸ்தூரியை ட்ரோல் செய்து வருகின்றனர். எனினும், இதற்கும் பதட்டப்படாத கஸ்தூரி "உங்கள் கோவத்தை அப்படியே தக்கவைத்து எ.ஃபி.-யில் பதில் அளியுங்கள்"  என தெரிவித்துள்ளார். 

ALSO READ: America-வை அசத்தும் என்ஜாய் எஞ்சாமி பாடல்: ஜொலிக்கும் பாடகி தீ !! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News