விமானத்தில் பாலியல் தொல்லை: வீடியோ வெளியிட்ட தங்கல் பட நடிகை

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்து இருந்தார்.

Last Updated : Dec 10, 2017, 09:46 AM IST
விமானத்தில் பாலியல் தொல்லை: வீடியோ வெளியிட்ட தங்கல் பட நடிகை title=

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் அவர் விமான பயணம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் ஜைரா பயணம் மேற்கொண்டு உள்ளார்.  விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த பொது அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் ஜைராவிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதுபற்றி அழுதுகொண்டே அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், விமானத்தில் இருந்த ஒருவரும் தனது உதவிக்கு வரவில்லை. இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம், என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News