#CauveryIssue: கர்நாடக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிம்பு!

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு மாநில மக்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய நடிகர் சிம்புவின் கருத்திற்கு கர்நாடக மக்கள் அமோக வரவேற்ப்பு கொடுத்துள்ளனர்.

Last Updated : Apr 12, 2018, 04:28 PM IST
#CauveryIssue: கர்நாடக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிம்பு! title=

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு மாநில மக்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய நடிகர் சிம்புவின் கருத்திற்கு கர்நாடக மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்ககூடாது எனவும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து,  திரைத்துறையினரும் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் நடிகர் சிம்புகலந்து கொள்ளவில்லை. 

இதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், 

காவிரி நீரை தமிழகத்திற்கு தர கூடாது என கர்நாடகாவை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்.  கர்நாடகா மக்கள் அனைவரின் கருத்து அதுவல்ல. காவிரி பிரச்னையை வைத்துதான் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அரசியல் நடக்கிறது. வாக்குகளுக்காகவே அரசியல் கட்சிகள் காவிரி பிரச்னையைக் கையில் எடுக்கிறார்கள். இதனை உணா்ந்து கன்னட மக்கள் தமிழா்களுக்கு வரும் 11 ஆம் தேதி ஒரு டம்ளா் தண்ணீா் கொடுக்க வேண்டும்.  பின்னர், அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவே இணையத்தில் பதிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

காவிரி நீர் கொடுப்பது குறித்த சிம்புவின் பேச்சு கர்நாடக மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை ஏற்று மக்கள் தண்ணீர் தர தயார் என்று கூறிய வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.

இதன் மூலம் தற்போது சிம்பு கர்நாடக மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார். அதுமட்டுமின்றி, அவருடைய படங்களுக்கு அமோக வரவேற்ப்பு கொடுக்க முன் வந்து விட்டனர் கர்நாடக மக்கள்.


Trending News