குழந்தையோடு கொஞ்சி விளையாடும் ஆட்டுக்குட்டி; வைரல் வீடியோ

குழந்தையோடு கொஞ்சி விளையாடும் ஆட்டுக்குட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2022, 09:13 PM IST
குழந்தையோடு கொஞ்சி விளையாடும் ஆட்டுக்குட்டி; வைரல் வீடியோ title=

கள்ளம் கபடமற்ற குழந்தைகளோடு விளையாடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது. தூய மனது கொண்ட அவர்கள், அனைவரையும் நொடிபொழுதில் மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய மந்திர சக்தியை தங்களிடம் வைத்திருப்பவர்கள். அவர்களிடம் இருக்கும் இந்த மந்திர சக்தி மற்றவர்களிடம் இருப்பது என்பது அரிது. போட்டி, பொறாமை மற்றும் வஞ்சம் ஏதும் அவர்களிடம் இருக்காது. குழந்தைகளின் ஒரே குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும். மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை எதிர் இருப்பவர் சிரித்தால் தான் தாங்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள். அப்படியான குழந்தைகளுடன் நேரம் செலவிடும்போது, நேரம் செல்வதே தெரியாது. 

அவர்களுக்கு மனிதர்கள், விலங்குகள் என்ற பேதம் கூட இருக்காது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள், தாங்கள் விளையாட வேண்டும் நினைக்கும் நேரத்தில் யார் இருந்தாலும் விளையாட தயாராகிவிடுவார்கள். அப்படி, ஒரு அழகான சுட்டிக் குழந்தை ஆடு ஒன்றுடன் விளையாடும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் ஜாலியாக தள்ளிக் கொண்டு விளையாடுகிறார்கள். ஆடும் குழந்தையை செல்லமாக முட்டித் தள்ளுகிறது. அதில் சிரித்துக் கொண்டே கீழே விழும் குழந்தை மீண்டும் எழுந்து நடனமாடுகிறது. பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும் ஆசையாகவும் இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது.

மேலும் படிக்க | பேரனுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் ப்யூட்டி பாட்டி ராஜாமணியின் சமூக ஊடக அலப்பறை

அந்த வீடியோவில் குழந்தை மற்றும் ஆட்டுக் குட்டி இருக்கின்றன. ஆட்டுக் குட்டி செல்லமாக குழந்தையை முட்டித் தள்ளுகிறது. அதனைப் பார்த்து ரசிக்கும் குழந்தை மீண்டும் எழுந்து நடனமாட, ஆட்டுக்குட்டியோ அந்தப் பக்கம் குதித்துக் கொண்டு மீண்டும் குழந்தையை முட்டி விளையாட வருகிறது. ஆனால் குழந்தை வேண்டாம் என செல்லமாக கையைக் காட்ட, ஆடிக் கொண்டே ஆட்டுக்குட்டி கொஞ்சம் தூரம் ஓடிவிடுகிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோவை இதுவரை ஏழு மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடியோவுக்கு கீழாக கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பின்னி பிணையும் சாரை பாம்புகள்; இப்படி ஒரு காதலா: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News