AMG133: உடல் இளைக்க இந்த மருந்தே போதுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

Obesity Drug: உடல் பருமனை குறைக்கும் மருந்து விரைவில் சந்தைக்கு வரும்! இளைத்த உடலை, மீண்டும் குண்டாக்காது மருந்து ஆராய்சி தரும் மகிழ்ச்சி செய்தி... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2022, 09:33 AM IST
  • இளைத்த உடலை மீண்டும் குண்டாகாமல் பாதுகாக்கும் மருந்து
  • ஆராய்ச்சிகள் தரும் நம்பிக்கை
  • நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் செய்தி
AMG133: உடல் இளைக்க இந்த மருந்தே போதுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் title=

தற்போது உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. உடல் எடை குறைவதற்காக பலரும் பிரம்ம பிரயர்த்தனம் செய்வது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் தான். எடை குறைப்பு மாத்திரைகளுக்கான பரிசோதனையில் உடல் பருமனை குறைக்கும் மருந்து நம்பிக்கையளிப்பதாகவும், நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை நிரூபிக்கிறது என்று மருந்து நிறுவனம் கூறுகிறது. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து முதல் கட்ட சோதனையில் நேர்மறையான பலன்களைக் கொடுத்திருக்கிறது.

AMG133 எனப்படும் மருந்தின் உட்செலுத்தப்பட்ட மிக உயர்ந்த அளவு முதல்கட்ட பரிசோதனையில் நல்ல பதிலைக் கொடுத்திருக்கிறது. மருந்து கொடுத்து பரிசோதிக்கப்பட்ட 70 நாட்களில் உடல் எடை இழப்பு கணிசமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. Amgen Inc நிறுவனத்தின் உடல் பருமன் குறைக்கும் மருந்து, அதன் ஆரம்பகட்ட சோதனையில் நன்மையளிக்கும் என்று தெரிகிறது.  

மேலும் படிக்க | Weight Loss Vegetable: உடல் எடையைக் குறைக்கும் கருணைக் கிழங்கு

நவம்பர் 7 ஆம் தேதி, AMG133 இன் அதிகபட்ச மாதாந்திர டோஸ் நிர்வகிக்கப்பட்ட 12 வார சோதனை சிகிச்சையில், சராசரியாக 14.5% எடை இழப்பு காணப்பட்டது என்று நிறுவனம் கூறியதை அடுத்து, ஆம்ஜென் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5% அதிகரித்தன என்பது இந்த மருத்து எதிர்காலத்தில் மக்களிடையே சக்கைபோடு போடும் என்பதையும், மக்களின் உடல் இளைக்கும் விருப்பத்தையும் காட்டுவதாக உள்ளது.

கடைசி டோஸின் 150 நாட்களுக்குப் பிறகு, இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் இருதய நோய்க்கான உலக காங்கிரஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சோதனை தொடங்கியபோது, அசல் எடையை விட 11.2% குறைவாக பராமரிக்கப்பட்ட எடை குறைந்தது.

மேலும் படிக்க | Diabetes Diet: நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த உணவுகள் கண்டிப்பாக டயட்டில் இருக்க வேண்டும்

AMG133 உடன் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வாந்தி மற்றும் குமட்டல் உள்ளிட்ட பக்கவிளைவுகளை எதிர்கொண்டதாக ஆம்ஜென் கூறினார், இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் லேசான அளவிலேயே இருந்தது. அந்த அறிகுறிகளும்  சில நாட்களில் சரியாகிவிட்டதாம்.

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் 40% க்கும் அதிகமானோர் பருமனானவர்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் மதிப்பிட்டுள்ளன. டைப் 2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள், இதய நோய்கள் மற்றும் கடுமையான கோவிட்-19 போன்ற உடல்நலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடல் பருமனே முதன்மைக் காரணமாக உள்ளது.

உடல் எடை மற்றும் குறைந்த கொழுப்பு நிறை மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய மரபணு சமிக்ஞைகளை அடையாளம் காண நிறுவனம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளது என்று Amgen இன் கார்டியோவாஸ்குலர் வளர்சிதை மாற்ற கண்டுபிடிப்பு தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அற்புதமான பழம் நாகப்பழம்! ஆனால் இந்த ‘3’ காம்பினேஷனுடன் இணைந்தால் ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News