POTS நோய் என்றால் என்ன? அறிகுறிகள் மற்றும் நீண்டகால கோவிட் நோயுடனான தொடர்பு

POTS Long Haulers Covid: பாட்ஸ் நோய்க்கும் நீண்ட கால கோவிட் நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என ஆராய்ச்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன. கொரோனா, கோவிட் பாதிப்பின் பக்க விளைவாக பலருக்கு பாட்ஸ் அதிகரித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2023, 09:24 PM IST
  • கோவிட் பாதிப்பின் பக்க விளைவு தரும் அச்சம்
  • உலகில் பலருக்கு பாட்ஸ் நோய் அதிகரித்துள்ளது
  • அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி
POTS நோய் என்றால் என்ன? அறிகுறிகள் மற்றும் நீண்டகால கோவிட் நோயுடனான தொடர்பு title=

Long Covid-related POTS: தன்னியக்க நரம்பு மண்டலத்தின் ஒரு கோளாறு, போஸ்டுரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா சிண்ட்ரோம் எனப்படும் POTS நோய் ஆகும்.  பொதுவாக உட்கார்ந்து அல்லது படுத்து எழுந்த பிறகு இதயத் துடிப்பில் விரைவான அதிகரிப்பு ஏற்படும் நோய் இது. தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி, மயக்கம் அல்லது கிட்டத்தட்ட மயக்கம், இதயத் துடிப்பு, மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் நடுக்கம் மற்றும் வியர்வை. செரிமான பிரச்சனைகள், அதீத சோர்வு, மூளை மூடுபனி, தீவிர சோர்வு, கைகள் மற்றும் கால்கள் ஊதா நிறமாக இருப்பது, மங்கலான அல்லது சுரங்கப் பார்வை மற்றும் தலைவலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

இதய துடிப்பில் அதிகரிப்பு

எளிமையாக விளக்கினால், நாம் எழுந்து நிற்கும் போது இதயத் துடிப்பில் அதிகரிப்பு ஏற்படும் மற்றும் இரத்தத்தின் பெரும்பகுதி கீழ் உடலில் இருக்கும் போது ஏற்படும் நிலை ஆகும்.

அமெரிக்கர்களுக்கு அதிக பாதிப்பு

இந்த பாட்ஸ், சுமார் ஒன்று பத்து முதல் முப்பது லட்சம் அமெரிக்கர்களை பாதிப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இன்ஸ்டிட்யூட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த நோய்க்கான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஆண்களை விட பெண்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல.

மேலும் படிக்க | Anemia Alert: இரத்த சோகையா? இரும்புச்சத்து குறைபாடா? இதை செய்து பாருங்க

கோவிட் உடன் POTS நோய்க்கு தொடர்பு

"கொரோனா வைரஸால் ஏற்படும் நோயான கோவிட்-19 இலிருந்து பலர் விரைவில் குணமடைந்தாலும், குணமடைந்த மற்றவர்கள் பல மாதங்களாக அறிகுறிகளை அனுபவிப்பார்கள். ஆராய்ச்சியாளர்கள் இன்னும் இந்த நீட்டிக்கப்பட்ட அறிகுறிகளுக்கான காரணத்தை நிர்ணயித்து வருகின்றனர், ஆனால் சில கோவிட்-19 பாதித்தவர்கள், பாட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனது ஆராய்ச்சியில், நீண்ட கோவிட் பற்றி குறிப்பிடும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் POTS திட்டத்தின் இயக்குனர் டே சுங், இணையதளத்தில் ஒரு கட்டுரையில், பாட்ஸ் நோய் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம் மற்றும் நீண்ட கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

இந்த வாரம் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, நீண்ட கோவிட் தொடர்பான POTS க்கான சாத்தியமான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் இன்னும் ஆய்வு செய்யப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News