செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.
அந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.
நாசா அனுப்பிய இந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி மனித குல வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியது. அதோடு, ஹெகாப்டருடன் செல்பி எடுத்து கொண்டு அனுப்பி அசத்தியது
ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒரு Selfie; ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்த நாசா விண்கலம்
மீண்டும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், இன்ஜெனியூட்டி (Ingenuity) ஹெலிகாப்டரின் பிளேட்களின் சத்தத்தை பதிவுசெய்து அனுப்பி வரலாறு படைத்துள்ளது. நாசா விண்வெளி நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் புதிய காட்சிகளை வெள்ளிக்கிழமை (மே 7, 2021) வெளியிட்டது.
இந்த காட்சிகள் கிட்டத்தட்ட மூன்று நிமிட நீள ஆடியோ டிராக்குடன் இருந்தன. அதில் ஹெலிகாப்டரின் இறக்கைகள், செவ்வாய் கிரக காற்றை கிழித்துக் கொண்டு முணுமுணுப்பதைக் காணலாம்.
உன்னிப்பாகக் கேட்டால், இன்ஜெனியூட்டி (Ingenuity) ஹெலிகாப்டர் பிளேட்களின் முனகல் சத்தத்தை கேட்க முடிகிறது.
New sounds from Mars: Our @NASAPersevere rover caught the beats coming from our Ingenuity #MarsHelicopter! This marks the first time a spacecraft on another planet has recorded the sounds of a separate spacecraft.
Turn the volume up: https://t.co/o7zG6mQJzx pic.twitter.com/s8Hm3dhcgg
— NASA (@NASA) May 7, 2021
ALSO READ | வரலாறு படைத்துள்ள NASA; Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR