செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2021, 12:01 AM IST
  • ஜசீரோ பள்ளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
  • பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததா என்பதையும் அங்குள்ள வளிமண்டலத்தையும் புரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • செவ்வாய் கிரகத்தில் (Mars) உயிர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறது
செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்  title=

அமெரிக்க விண்வெளி ஏஜென்சி நாசா நீண்ட காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

சமீபத்தில், NASA Perseverance ரோவர் (NASA Mars Perseverance Rover) மூலம் செவ்வாய் கிரகத்தில் (Mars) உயிர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறது. மறுபுறம், சில விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிர்கள் இருக்கிறதா என்பதை (NASA Mars Mission) பூமியில் இருக்கும் ஒரு சால்டா ஏரியின் உதவியுடன் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். 

தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா (NASA) கூறுகிறது.

துருக்கியின் சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் கற்கள் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்திற்கு (Jezero Crater) அருகில் காணப்படும் பாறைகளுக்கு மிகவும் ஒத்தவை என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள Jezero Crater என்பது நாசாவின் Perseverance Rover என்னும் ரோவர் தரையிறக்கிய இடமாகும். முன்பு ஜசீரோ பள்ளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மட்டுமல்ல, இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் மிகவும் ஆபத்தான பகுதி எனவும் கூறப்படுகிறது

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்...  பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

நுண்ணுயிரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஏரியைச் சுற்றியுள்ள பெரிய குன்றுகள் காணாமல் போயுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததா என்பதையும் அங்குள்ள வளிமண்டலத்தையும் புரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

அமெரிக்காவிலும் (America) துருக்கியிலும் உள்ள விஞ்ஞானிகள் சால்டா ஏரியின் சில பகுதிகள் குறித்து 2019 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி செய்தனர். சால்டா ஏரியில் உள்ள நீல நீர் மற்றும் வெள்ளை கரைகள் காரணமாக துருக்கியின் மாலத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து விஞ்ஞானிகள் முக்கிய தகவல்களை பெறலாம்.

ALSO READ | கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News