வேற்று கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் முதல் ரோவரான ஜுராங் மார்ஸ் ரோவர், பல மாதங்களாக "உறக்கநிலையில்" உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இது எழுந்திருக்க வேண்டும், ஆனால் தூக்கம் இன்னும் தொடர்கிறது. ரோவர் எப்போதாவது எழுந்திருக்குமா? சீனாவின் ஜுரோங் மார்ஸ் ரோவர் "உறக்கநிலையில்" நுழைந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், விஞ்ஞானிகள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். அதிலும், ரோவர் இனி எப்போதாவது எழுந்திருக்குமா? என்ற கேள்விக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்பதே பதிலாக இருக்கிறது.
Zhurong என்றால் என்ன?
Zhurong என்பது சீனாவின் லட்சிய செவ்வாய்ப் பயணமான Tianwen 1 இன் ஒரு பகுதியாகும், செவ்வாய் கிரக ரோவரை உள்ளடக்கிய இந்த பணித்திட்டம், 2021 ஆம் ஆண்டு மே மாதம் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியான உட்டோபியன் பிளானிஷியாவைத் தொட்டது.
ரோவர் ஏன் 'தூங்குகிறது'?
விண்கலனின் உறக்கம்
தரையிறங்கிய ரோவர், தரிசாய் இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உறக்கநிலை அல்லது செயலற்ற நிலைக்கு செல்வதற்கு முன், அது பல அறிவியல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது, குளிர்காலத்தில் அங்கு வெப்பநிலை மைனஸ் 195 டிகிரி பாரன்ஹீட் வரை (மைனஸ் 125 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்பதால், செவ்வாய் கிரகத்தில் சீனாவின் விண்கலம் செயலற்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு மே 18ம் தேதி தூங்கச் சென்ற விண்கலம், இன்னும் விழிப்பு நிலைக்கு வரவில்லை
மேலும் படிக்க | Astronomy: ஏழாண்டு நீடிக்கும் கிரகணத்தைப் பற்றித் தெரியுமா? வியக்கவைக்கும் பிரபஞ்சம்
விண்கலம் விழிக்க என்ன நடக்க வேண்டும்?
2022 செப்டம்பரில் செய்தியாளர்களிடம் பேசிய டியான்வென் 1 மிஷன் துணைத் தலைமை வடிவமைப்பாளரான ஜியா யாங், இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் ஜுராங் தானாகவே எழுந்துவிடும் என்று தெரிவித்தார். 140 வாட்ஸ் என்பதற்கு அதிகமான வெப்பம் இருந்தால் ரோவர் எழுந்திருக்கும், கிரகத்தின் வெப்பநிலை மேம்பட்டால் அதாவது 5 டிகிரி பாரன்ஹீட்டை (மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்) அடைந்தால், ரோவர் செயல்படும்..
மீண்டும் எப்போது எழும்ப வேண்டும்?
டிசம்பரில் சிவப்பு கிரகம் குளிரில் இருந்து விடுபடும்போது ஜுராங் தனது தூக்கத்தை முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இது நடக்கவில்லை. இதுவரை, அது செயல்படாத நிலையிலேயே இருக்கிறது.
என்ன தவறு நேர்ந்தது?
ஜனவரி 9ம் தேதி ஸ்பேஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவின் கிரகங்களுக்கிடையேயான முதல் பணித் திட்டமானது, "குளிர்கால உறக்கநிலைக்குப் பிறகு மேற்பரப்பில் தொலைந்து போகக்கூடிய சாத்தியக்கூறுடன்" சிக்கலில் இருக்கலாம். அல்லது வெப்பநிலை போதுமான அளவு இன்னும் அதிகரிக்காமல் இருக்கலாம்.
மேலும் படிக்க | Spy Rat: உளவாளியாக மாறும் எலிகள்! அதிசயமான கற்பனைக்கெட்டாத கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் தற்போதைய வெப்பநிலை என்ன?
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவரின் கூற்றுப்படி, கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தின் வெப்பநிலை ஜுரோங்கின் மிகக் குறைந்த வெப்பத் தேவையை விட மிகக் குறைவாகவே உயர்ந்துள்ளது.
பெர்செவரன்ஸ் ஏன் தூங்கவில்லை?
ஆனால், பெர்சவென்ஸ் விண்கலன், சிவப்பு கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதால், அது சீராக செயல்படுகிறது. அதோடு, இது அணுசக்தியால் இயங்குகிறது என்பதால், அது உறக்கநிலைக்கு செல்லாது..
சீனாவின் ஜுரோங் விண்கலன் ஏன் உறக்கத்திற்கு சென்றது?
Zhurong சூரியனின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஆற்றல் சக்தியை உருவாக்குகிறது.மணல் புயல்கள் அதிகம் வீசும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் தூசிகள் ரோவர் மற்றும் சூரிய வரிசைகளின் சக்தியை உருவாக்கும் திறனைத் தடுக்கலாம் என்ற கவலை உள்ளது.
ஜுரோங் சிறப்பு
ஜுரோங்கின் பேனல்கள் தூசி எதிர்ப்புப் பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைந்த இரண்டாவது நாடு என்ற அந்தஸ்தை சீனா அடைந்தது. அந்த சாதனைஇயை வெற்றிகரமாக தக்க வைக்க, ஜுரோங் தனது மீளாத்துயிலில் இருந்து எழ வேண்டும்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ