Mask: இதுதான் உண்மையான கொரோனா மாஸ்க்! வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்

கொரோனா வைரஸ் நெருங்கினால் பிரகாசிக்கத் தொடங்கும் முகக்கவசம் பற்றித் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 02:22 PM IST
  • உண்மையான கொரோனா மாஸ்க்!
  • வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்
  • நெருப்புக்கோழியின் முட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மாஸ்க்!
Mask: இதுதான் உண்மையான கொரோனா மாஸ்க்! வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்  title=

ஸ்மார்ட்போனின் எல்இடி லைட் மூலம் வைரஸைக் கண்டறியவும் முடியும். கொரோனா வைரஸ் உங்கள் சுவாசக் காற்றில் வந்தவுடனே, ஒளிரும் புதிய முகக்கவசத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு புற ஊதா கதிர்களில் இந்த முகமூடியை எடுக்க வேண்டும். ஸ்மார்ட்போனின் எல்இடி லைட் மூலம் வைரஸைக் கண்டறியவும் முடியும். 

இந்த முகமூடியை உருவாக்க நெருப்புக்கோழியின் முட்டையில் (ostrich eggs)  இருக்கும் ஆன்டிபாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு மூலம், குறைந்த செலவில் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நெருக்கமான ஃபில்டர்
இந்த முகக்கவசத்தில் (Face Mask) கோவிட் நோயை கண்டறியம் ஆன்டிபாடியுடன் பூசப்பட்ட ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. பறவை நோய்க்கு வலுவான எதிர்ப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ | இந்த நாடுகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை..!!

முட்டையிலிருந்து ஆன்டிபாடிகள்
இந்த ஆன்டிபாடிகள் நெருப்புக் கோழிகளின் முட்டைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இவை, செயலிழந்த, அச்சுறுத்தாத கொரோனா வைரஸில் செலுத்தப்பட்டன. நெருப்புக்கோழியின் முட்டைகளின் அளவு பெரியதாக இருப்பதாலும், அதில் ஆன்டிபாடிகள் வேகமாக உருவாகுவதாலும், ஒரு முட்டையில் நிறைய ஆன்டிபாடிகள் காணப்படுகின்றன.ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர்.

மூக்கு மற்றும் வாயைச் சுற்றி ஒளிரும் ஃபில்டர் 
சோதனைக்காக முகமூடியை அணிந்த பிறகு, வடிகட்டி அகற்றப்பட்டு அதன் மீது ஒரு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. பின்னர் அதன் மீது புற ஊதாக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 32 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், மூக்கு மற்றும் வாயைச் சுற்றி வடிகட்டி பிரகாசிப்பதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் சோதனை செய்யப்படும்

மேற்கு ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிபெக்ச்சுரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த சிறப்பு முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு அடுத்த ஆண்டுக்குள் அறிமுகமாகும்.

READ ALSO | முகத்தில் பொலிவும் பளபளப்பும் கூட  உதவும் மாஸ்க்

இதனால், வீட்டிலேயே குறைந்த விலையில் வைரஸை பரிசோதிக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த சிறப்பு முகக்கவசத்திற்கு இதுவரை விலை நிர்ணயிக்கப்படவில்லை. இதைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறித்தும் எந்த தகவலும் இல்லை.

"இது PCR சோதனையை (PCR test) விட மிக விரைவான மற்றும் நேரடியான பூர்வாங்க சோதனை" என்று கால்நடை மருத்துவப் பேராசிரியரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான சுகாமோட்டோ கூறினார். 'முகக்கவசத்தின்  ஃபில்டரில் வைக்கப்பட்டுள்ள ஆன்டிபாடிகள், இருமல், தும்மல் மற்றும் தண்ணீரில் இருக்கும் கொரோனா வைரஸை அடையாளம் காட்டுபவை' என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் முகக்கவசங்களை சுகாமோட்டோ முன்பு உருவாக்கியுள்ளார். இந்த சிறப்பு முகக்கவசங்களுக்கு காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதற்கு அடுத்தபடியாக, அடுத்த ஆண்டுக்குள் ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் இந்த சிறப்பு முகமூடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ | Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News