பூமியில் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்றுவரை விலகவில்லை. இப்போது விண்வெளியிலும் பெர்முடா முக்கோண மர்மம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் (America) உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது.
இப்பகுதிக்கும் வரும் கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன. இந்நிலையில், விண்வெளியில் உள்ள பெர்முடா முக்கோணம், விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய தலைவலையை கொடுத்துள்ளது.
பெர்முடா முக்கோண பகுதிக்கும் வரும் விமானங்கள் கப்பல்கள் காணாமல் போவதைப் போல, செயற்கை கோள்களும் (Satelite) காணமல் போகின்றன. இந்த பகுதியை கடக்கும் போதும் செயற்கைக் கோள்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
இந்த பகுதி தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை (south Atlanitic Anomaly- SAA) என்று அழைக்கப்படுகிறது. இது விண்வெளியின் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.
காந்தப்புலம் பூமியின் பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. இது சூரியனில் இருந்து ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சைத் தடுக்கிறது. காந்தப்புலம் குறைவாக இருக்கும் இடத்தில், இந்த கதிர்கள் பூமியின் மேற்பரப்புக்கு 124 மைல் தொலைவில் வரக்கூடும்.
பூமியின் சுற்றுப்பாதையில் ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டுள்ள சாதனங்கள் கதிர்வீச்சு காரணமாக சேதமடையக்கூடும். இந்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தையும் அங்கு வாழும் விண்வெளி வீரர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இப்பகுதி விரிவடைந்து மேற்கு நோக்கி நகர்கிறது. வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் இது 2019 ஆம் ஆண்டில் விட 10% அதிகமாக பரவியிருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!