நீட் தேர்வு: மாணவர்களுக்கு ரூ.1000 நிதியுதவி -தமிழக அரசு!

நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது! 

Last Updated : May 4, 2018, 04:04 PM IST
நீட் தேர்வு: மாணவர்களுக்கு ரூ.1000 நிதியுதவி -தமிழக அரசு!  title=

நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது! 

நாளை மறுநாள் ஞாயிறுக்கிழமை (மே 6-ம் தேதி) நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு நடைபெற 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. 

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவி...! 

> தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் வழங்கபடுகிறது.

>  நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் எனவும் இந்த பணத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

> நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் 14417 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

Trending News