புதுவையில் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்!

புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்! 

Last Updated : May 9, 2018, 10:48 AM IST
புதுவையில் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்!  title=

புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க இதற்காகவே தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. குழந்தையை கூட விட்டுவைக்காத காமுகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பான பிரச்சனைகளுக்கு தனி நீதிமன்றம் அமைக்க முடிவு செய்துள்ள புதுவை அரசு. 

புதுச்சேரியில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளதாக கிடைத்த  தகவலை அடுத்து அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, டாக்டர் வித்யாராம்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் காவல்துறை அதிகாரிகள், சட்டத்துறை செயலர் மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்! 

 

Trending News