ரஷிய நாட்டு அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்!
இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஈரானில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சபார் துறைமுகம் அமைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் மோடியும் நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் சோச்சி நகரத்தில் நடைபெறும் இச்சந்திப்பினை குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது....
Am confident the talks with President Putin will further strengthen the Special and Privileged Strategic Partnership between India and Russia. @KremlinRussia_E @PutinRF_Eng
— Narendra Modi (@narendramodi) May 20, 2018
“ரஷ்ய மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அதிபர் புதினை சந்திக்க நாளை சோச்சி நகர் பயணம் செய்ய உள்ளேன். அவரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. மேலும், அதிபர் புதினுடனான இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படுத்தப்படும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்!