ரஷ்ய நாட்டு அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்!
ரஷ்ய நாட்டு அதிபர் புதின் விடுத்த அழைப்பினை ஏற்று, ஒருநாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Narendra Modi leaves for Russia's Sochi for an informal summit with President #VladimirPutin pic.twitter.com/RNuE97GxZC
— ANI (@ANI) May 21, 2018
ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஈரானில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சபார் துறைமுகம் அமைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் மோடியும் நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் சோச்சி நகரத்தில் நடைபெறும் இச்சந்திப்பானது 4 முதல் 6 மணி நேரம் வரை நடைப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!