Tips To Reduce Thigh Fat : தொடையில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைக்க சில பயிற்சிகள் மேற்கொண்டால் போதும். அந்த பயிற்சிகளை பற்றி இங்கே காண்போம்.
ஆடைகளை அணிவதில் பல நேரங்களில் நாம் வெட்கப்படுகிறோம். ஏனென்றால் தொடை எப்படி இருக்கும் என்று நாம் அஞ்சுவதுண்டு. இது போன்ற கவலை உங்களுக்கும் இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
சுப்தா பதங்குஸ்தாசனம்: இந்த யோகாசனம் உள் தொடைகள், தொடை எலும்புகள் மற்றும் கன்றுகளில் தசைகளை நீட்ட உதவுகிறது.
டால்பின் யோகா போஸ்: இந்த யோகா போஸில் சில நிமிடங்கள் ஈடுபடுவது மூலம் தொடை பகுதியை வலுப்படுத்த முடியும். அங்கிருக்கும் எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு வழிவகுக்க செய்கிறது"
உட்கடாசனம்: உட்கடாசனம் தொடை தசைகளை ஈடுபடுத்தி செய்யும் யோகாசனமாகும். இதனால், உங்கள் தொடை எலும்புகள் மற்றும் குளுட்ஸ்கள் குறையும். இது உங்கள் தொடைகளை வலுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
நடராஜாசனம்: நடராஜாசனம் இடுப்பு, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளை குறைக்க உதவும். இதில், இடுப்பு நீட்டப்பட்டு, முழு உடலும் ஈடுபடுவதால், அது கலோரிகளை எரிக்கவும், தொடை தசைகலை குறைக்கவும் உதவுகிறது.
மலாசனம்: மலாசனம் உள் தொடை தசைகள் மற்றும் உங்கள் கால்களை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்த உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இடுப்பு மற்றும் தொடைக்கு ஆழமான வலுவை வழங்குகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.