டாப்பில் இருக்கும் ரோஹித்... சீறி வரும் சூர்யகுமார் - லிஸ்ட்ல யார் யார் இருக்கானு பாருங்க!

Most T20I Centuries: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில், சூர்யகுமார்  யாதவ் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த நிலையில், சர்வதேச டி20 அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • Jan 08, 2023, 08:20 AM IST

 

 

 

 

1 /5

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 சதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தற்போது 140 இன்னிங்ஸ்களை விளையாடி உள்ளார். 

2 /5

சூர்யகுமார் யாத் 43 இன்னிங்ஸ்களில் 3 சதம், 14 அரைசதங்களுடன் 1,578 ரன்களை குவித்துள்ளார். இவரின் சராசரி 46.41. இந்த பட்டியலில் அதிக சராசரி கொண்ட வீரர் இவர்தான்.   

3 /5

செக் குடியரசு நாட்டின் சபாவூன் டேவிசி 28 இன்னிங்ஸ்களை மட்டும் விளையாடி 3 டி20 சதங்களை குவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மொத்தம் 1,724 ரன்களை குவித்துள்ளார்.   

4 /5

ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வேல் 3 சதங்களுடன் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 90 இன்னிங்ஸ்களில் 2,159 ரன்களை குவித்துள்ளார். 

5 /5

நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோவும் 3 சதங்களுடன் இதில் இடம்பிடித்துள்ளார். இவர் 62 இன்னிங்ஸ்களில் 1,724 ரன்களை குவித்துள்ளார்.