What Will Happen If You Do Not Sleep At Night : இரவில் அனைவரும் சரியாக தூங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஆனால், அந்த தூக்கம் கெட்டுப்போனால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
What Will Happen If You Do Not Sleep At Night : நம் மனதில் நிம்மதி என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதை, நமது தூக்கத்தை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம். காரணம், உடலில் ஏதேனும் பிரச்சனை அல்லது மனதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்தான் இரவில் தூக்கம் கெட்டுப்போகும். இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? வாங்க, விரிவாக பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு: இரவில் அதிக நேரம் விழித்துக்கொண்டு இருப்பதால் பசியுணர்வு அதிகமாகலாம். இதனால், எடை கூடி போகலாம்.
சரும ஆரோக்கியம்: சரியாக தூங்காமல் இருப்பது, சரும ஆரோக்கியத்தை கெடுக்கலாம். கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ளிட்ட சில பாதிப்புகளை அவை கொண்டு வரலாம்.
மனநிலை மாற்றங்கள்: சரியாக தூங்காதது பதற்றம், மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்ற பிரச்சனைகளை உருவாக்க இயலும்.
தனிமை: இரவில் வெகு நேரம் விழித்துக்கொண்டிருப்பதால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் உங்களால் இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால் தனிமை உணர்வு மேலோங்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி: தூக்கம் சரியாக இல்லாததால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புள்ளதாம்.
சோர்வு: இரவில் தாமதமாக உறங்குவதால், உங்களின் சர்காடியன் ரிதம் சரியாக இயங்காமல் போகலாம். இதனால் எப்போதும் சோர்வான மனநிலையே இருக்கும்.
கவனச்சிதறல்: தூக்கமின்மை பிரச்சனை, கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். முடிவெடுத்தல் திறன், நினைவாற்றல் ஆகியவை மங்கி போகலாம்.
உடல் நிலையில் முன்னேற்றமின்மை: தூக்கமின்மை, நாள்பட்ட நோய் பாதிப்பிற்கு வழிவகுக்கலாம். இருதய நோய் தொடர்பான பிரச்சனைகள் உள்பட சில நோய் பாதிப்புகள் இதில் அடங்கும்.