சந்திர கிரகணத்திற்கு பின் தானம் செய்தால் என்ன பலன்? ஜோதிட பரிகாரங்கள்

Lunar eclipse 2023: சந்திர கிரகணத்திற்குப் பிறகு தானம் செய்வதன் சிறப்பு முக்கியத்துவம் தொடர்பாக இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளை சந்திர கிரகணத்திற்கு பிறகு சில விசேஷங்களை தானம் செய்வதால் கிரகணத்தின் தோஷங்கள் நீங்குவது மட்டுமின்றி பல பலன்களையும் தரும்.

1 /10

நாளை (அக்டோபர் 28, சனிக்கிழமை ) நள்ளிரவில் சந்திரன் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் நுழைந்தாலும் (பெனம்ப்ரல் சந்திர கிரகணம்), பூமியின் நிழலில் (அம்ப்ரல் சந்திர கிரகணம்) அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலையில் நுழைகிறது.

2 /10

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கு இடையில் வரும் நள்ளிரவில் இந்த கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட  செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

3 /10

இந்த கிரகணத்தின் ‘அம்ப்ரல் கட்டம்’, அதாவது நிழல் சந்திரனின் மீது விழுவது, ஞாயிறன்று (அக்டோபர் 29) அன்று அதிகாலை 01:05 மணிக்குத் தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என்றும் அரசு அறிக்கை கூறுகிறது.

4 /10

நாளை சந்திர கிரகணத்தின்போது கோவில்கள் அனைத்தும் மூடப்படும். கிரகண சுத்திக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்படும். திருப்பதி கோவிலில் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது

5 /10

கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்து சேரும்.  பல கடுமையான பிரச்சனைகளுக்கு கிடைக்கும். இது தவிர, புகழ், பலம், மனவலிமை ஆகியவையும் வந்து சேரும். எந்த பொருளை தானம் செய்தால் என்ன கிடைக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள் 

6 /10

சந்திர கிரகணத்திற்குப் பிறகு சர்க்கரை தானம் செய்வதால், இஷ்ட தெய்வங்களும், தெய்வங்களும் மகிழ்ச்சியடைந்து அருள்பாலிக்கின்றனர். எப்போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழலாம்

7 /10

சந்திர கிரகணத்திற்குப் பிறகு வெள்ளியை தானம் செய்வதும் நல்லது. வெள்ளியை தானம் செய்வதன் மூலம், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் மற்றும் செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்

8 /10

அரிசி சந்திரனுடன் தொடர்புடையது. மங்கள வேலைகளிலும் வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சந்திர கிரகணத்திற்கு பிறகு அரிசி தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

9 /10

சந்திர கிரகணத்திற்குப் பிறகு பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். சந்திரனுடன் தொடர்புடைய பாலை, சந்திர கிரகணத்திற்கு பால் தானம் செய்வதால் ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுவதோடு செல்வம், புகழ், மன அமைதி கிடைக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை