எலும்பு முதல் இதயம் வரை பல வித நன்மைகளை அள்ளித்தரும் பப்பாளி

Health Benefits of Papaya: பப்பாளியில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது பல சரும பிரச்சனைகளையும் எளிதில் நீக்குகிறது. பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பழங்கள் பொதுவாக நமது உடலுக்கு பல வித ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். பப்பாளி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. பெரும்பாலான மக்கள் அதை மிகவும் விரும்பி உட்கொள்வதுண்டு. 

1 /8

பப்பாளி: ஃபோலேட், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் உள்ளன. இதனை உட்கொள்வதால் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் குறைவதோடு, எலும்புகளும் வலுவடையும். இது ஆண்டு முழுவதும் சந்தையில் எளிதாகக் கிடைக்கும். 

2 /8

செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்: பப்பாளி சாப்பிடுவதால் செரிமான (Digestion) பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பப்பாளியில் உள்ள ஹைமோபாபைன் மற்றும் பாப்பைன் என்ற கூறுகள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதை உட்கொள்வது உணவை ஜீரணிக்க உதவுகிறது, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் உப்பசம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

3 /8

இதயத்திற்கு நன்மை பயக்கும்: பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதுடன் இதயத்தை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது. 

4 /8

அழற்சியை குறைக்க உதவும்: பப்பாளி (Papaya) சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அழற்சி குறைவதோடு, பல வகையான நோய்களும் குறையும். பப்பாளி சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. 

5 /8

எலும்புகளை வலுப்படுத்தும்: பப்பாளி சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைவது (Bone Health) மட்டுமின்றி தசை வலியும் குறையும். பப்பாளியில் ஏராளமான கால்சியம் உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது, நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைக்கிறது. பப்பாளியில் வைட்டமின் கே ஏராளமாக உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

6 /8

எடை குறைக்க உதவும்: பப்பாளி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவுகிறது. உடல் பருமனை தடுக்கும் பண்புகள் பப்பாளியில் உள்ளன. இது தொப்பைய்யை குறைத்து (Belly Fat) எடையை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் குறைந்த கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கவும், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

7 /8

எச்சரிக்கை: பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் கேட்ட பின்னரே அதை உட்கொள்ளவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை