தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோ

Health Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Health Benefits of Curd: தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இன்றைய பிஸியான வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தயிர் நமக்கு உதவும். தயிர் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

தயிரின் ஆரோக்கிய நன்மைகள்: தயிர் பிடிக்காதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள். தினசரி தயிர் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கான எளிதான மற்றும் பயனுள்ள வழியாக பார்க்கபப்டுகின்றது. தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 அற்புதமான நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். 

2 /8

எடை இழப்பு: தயிரில் அதிக புரதச்சத்து உள்ளது. இது வயிற்ருக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. மேலும் இது ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வதையும் தவிர்க்க உதவுகிறது. இது எடையை குறைக்க உதவுகிறது.

3 /8

செரிமானத்தை மேம்படுத்துகிறது: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

4 /8

நீரிழிவு நோய்: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், தயிரின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மிக குறைவாகும். ஆகையால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

5 /8

எலும்பு ஆரோக்கியம்: தயிரில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் ஆகியவை உள்ளன. இந்த இரண்டு தாதுக்களும் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

6 /8

நோய் எதிர்ப்பு சக்தி: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. நோய்த்தொற்றிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால் தயிர் சாப்பிடுவது நமது வலிமையை அதிகரிக்கின்றது.

7 /8

எவ்வளவு தயிர் சாப்பிடலாம்? தினமும் ஒன்று முதல் இரண்டு கப் தயிர் சாப்பிடுவது நன்மை பயக்கும். தயிரை அப்படியே சாப்பிடலாம், அல்லது, பழங்கள், இனிப்புகள் அல்லது காய்கறி கலந்து பச்சடியாகவும் சாப்பிடலாம். இருப்பினும், இனிப்பு கலந்த தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.