Guess Who: சிறு வயதில் செம க்யூட்டாக பிரபல திரை நட்சத்திரங்கள்! யாரென்று தெரிகிறதா?

Guess Who : தமிழ் திரையுலக செலிப்ரிட்டிக்களின் சில புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகியிருக்கும் இந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

 

Guess Who : இணையதளம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், அடிக்கடி மக்கள் எதையாவது ஒரு விஷயத்தை வைரலாக்குவது உண்டு. சில திரைப்பட பிரபலங்களின் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் உலா வரும். அந்த வகையில், தமிழ் சினிமாவின் அக்காள்-தம்பியின் சிறு வயது புகைப்படங்கள்தான் இப்போது வைரலாகி இருக்கின்றன. இதில், அக்காள் 90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தம்பி ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர்கள் யார் தெரியுமா? 

1 /7

தமிழ் சினிமாக்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர், உறவினர்களாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பர். ஸ்ருதி ஹாசன்-அக்ஷரா ஹாசன், அருண் விஜய்-ஸ்ரீதேவி, ஜித்தன் ரமேஷ்-ஜீவா என பல சகோதர-சகோதரிகள், அண்ணன் தங்கைகள், அக்காள் தங்கைகள் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி, கோலிவுட்டில் உள்ள உடன்பிறந்தவர்கள்தான் தேவயானி-நகுல். 

2 /7

தேவையானி ஒரு பக்கம் 90ஸ் கதாநாயகியாக வலம் வர, அவரது தம்பி நகுல் வாலிப வயதிலேயே திரையுலகின் பக்கம் வந்து விட்டார். 

3 /7

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து, சில பிரபலமான சினிமா பாடல்களையும் பாடியிருக்கிறார். 

4 /7

தேவயானி, கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார். நாயகி, அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது அம்மா-மாமியார் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். 

5 /7

இவர்கள் இருவரும் உடன் பிறப்புகள் என்பது தமிழ் ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. 

6 /7

நகுல், தனது தந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படம். 

7 /7

தேவயானி மற்றும் நகுலின் சிறு வயது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.