எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!

Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். 

Weight Loss Tips: ஒவ்வொருவரது உடல் வாகும் வித்தியாசமானது. ஆகையால் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க அனைவரும் அவர்களது உடலுக்கு ஏற்ற முயற்சிக்களை எடுக்க வேண்டும். உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை எதை செய்யக்கூடாது என்பதிலும் காட்ட வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி இங்கே காணலாம். 

1 /8

பலர் பிசியான வாழ்க்கை முறையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். இது தவறு. அதிக தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். போதுமான அளவு நீர் அருந்துவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதுடன் உடலும் நிரம்பிய உணர்வுடன் இருக்கின்றது. இது அதிக உணவை தவிர்க்க உதவுகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்குகிறது. 

2 /8

போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது ​​​உங்கள் உடல் கிரெலின் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இது உங்களுக்கு பசியை ஏற்படுத்துகிறது. இதனால் இரவில் சாப்பிடத் தோன்றுகிறது. இது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது. கூடுதலாக, தூக்கமின்மை உங்கள் உடலில் லெப்டின் என்ற ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது.  

3 /8

உடற்பயிற்சிக்கு பிந்தைய உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக கலோரி உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது தவறு. வொர்க்அவுட்டிற்குப் பிறகு அதிக கலோரிகளை சாப்பிடுவது நல்லதல்ல. இது கலோரிகளை மீண்டும் உயர்த்தும். இதன் காரணமாக உடற்பயிற்சி செய்தும் பலனில்லாமல் போய்விடுகின்றது. 

4 /8

குறைவாக சாப்பிடுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது உண்மையல்ல. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதும், குறைவாக சாப்பிடுவதும் உங்கள் எடையை ஆரம்பத்தில் குறைக்கலாம், ஆனால் சில நாட்களுக்கு பிறகு, உணவின் அளவை சற்று அதிகரித்தாலும், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். ஆகையால், உடல் எடையை குறைக்கும் போது, ​​அளவை குறைக்காமல், சமச்சீரான, குறைந்த கலோரி (Low Calorie) கொண்ட உணவை உட்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

5 /8

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி (Exercise) முக்கியம். அதனுடன் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல், அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும். எடை இழப்புக்கு உடல் செயல்பாடு மிக அவசியமாகும். இதன் மூலம் உடலின் இரத்த ஓட்டம் சமமாக இருபதோடு கூடுதல் கொழுப்பு சேர்வதும் தவிர்க்கப்படுகின்றது.   

6 /8

ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து உணவு வகைகளும், அனைத்து வித ஊட்டச்சத்துகளும் அவசியம். சிலர் சில உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார்கள். இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். ஆகையால், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது நல்லது. எப்போதும் உங்கள் உணவில் பல வகையான உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சலிப்பைக் குறைக்கவும், ஜீரணிக்க எளிதாக இருக்கும் சமச்சீர் உணவை (Balanced Diet) உட்கொள்ளவும் உதவும்.

7 /8

மன அழுத்தத்துக்கும் தொப்பை கொழுப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் முதலில் மன அழுத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.