தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை நீடித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று (13.12.2024) மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (13.12.2024) ஒரு நாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (13.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று திருவாரூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி தி சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கரூர், தருமபுரி, அரியலூர், நாமக்கல், பெரம்லூர், திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.