நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு: முக்கியத் தருணங்கள்

15th President of India: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற வரலாறு படைத்த மாண்புமிகு திரெளபதி முர்மு பதவியேற்பு விழாவின் முக்கிய தருணங்கள்...

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பதிவு செய்திருக்கிறார் நாட்டின் முதல் குடிமகள் திரெளபதி முர்மு...

மேலும் படிக்க | இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

1 /7

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது

2 /7

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றார் மாண்புமிகு திரெளபதி முர்மு

3 /7

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான செல்லுபடியான 3219 வாக்குகளில் திரௌபதி முர்மு 2161 வாக்குகள் பெற்றார். யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகள் பெற்றிருந்தார்.

4 /7

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

5 /7

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்முவுக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

6 /7

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

7 /7

திரெளபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரும், குடியர்சு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற மத்திய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.