Can We Wash Your Face With Hot Water? பலர், சுடு தண்ணீரில் முகம் கழுவும் பழக்கத்தை கொண்டிருப்பர். இதனால் முகத்தில் பிரச்சனை ஏற்படும் என தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Reason Not To Wash Face With Hot Water: சரும பராமரிப்பில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, முக பராமரிப்புதான். முகத்தை கழுவும் போது, தண்ணீரில் உள்ள வெப்பநிலை சருமத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு முகத்தை சூடான தண்ணீரில் கழுவ வேண்டுமா அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டுமா என்பது குறித்து சந்தேகம் இருக்கும். அதை தீர்த்துக்கொள்வோம் வாங்க.
முகம் கழுவுவது என்பது, சரும் பராமரிப்பின் அடிப்படையாகும். முகத்தின் சருமத்தை பார்த்துக்கொள்ள, விதவிதமான க்ரீம்களை தேடித்தேடி வாங்குவோம், உபயோகிப்போம். ஆனால், பலருக்கு வெந்நீரில் முகம் கழுவுவதா, அல்லது சாதாரண நீரில் முகம் கழுவுவதா என்ற சந்தேகம் இருக்கும். சுடு நீரில் முகம் கழுவுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
அதிக சூடான நீரில் முகத்தை கழுவினால், அது சருமத்தில் இருந்து தேவையான எண்ணெய்களின் அளவைக் குறைக்கிறது. இதனால் சச்ருமம் வறண்டு கடினமானதாக மாற வாய்ப்பிருக்கிறது. சூடான நீர் சருமத்தின் pH அளவை குறைத்து, சருமத்தின் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தை குறைப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
உங்களது சருமம் மிகவும் சென்சிடிவானதாக இருந்தால், வெந்நீரில் முகம் கழுவுவதை தவிர்க்கவும். வெந்நீரில் கழுவினால், அது உங்கள் சருமத்தில் சிவப்பு அடையாளங்களத்தை ஏற்படுத்தும். இது உங்கள் சருமத்தை இன்ஃபெக்ஷன் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
அதிக அளவு சூடு உள்ள தண்ணீரில் அடிக்கடி முகம் கழுவுவதால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம். இதனால் எப்போதும் சாதாரண தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.
அதிக சூடுள்ள வெந்நீரில் முகத்தை கழுவுவது முகத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்த வழி வகுக்கும். பாக்டீரியாக்கள் சூடான நிலையில் அதிகம் வளரும். இது உங்கள் சருமத்தை வறட்சி அடைய வழி வகுக்கும். இதன் காரணமாக நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் மற்றும் பிற பொருட்கள், இது மேலும் முகப்பரு மற்றும் பிற தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி விடுகிறது. இது சருமத்தை வறண்டு போகச் செய்து, வறண்ட சருமத்திற்கு வழி வகுக்கும்.
எப்போதும், முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீரில்தான் கழுவ வேண்டும். இதனால், சருமத்தை நன்றாக பராமரிப்பது மட்டுமன்றி, சீக்கிரம் சுருக்கம் விழாமலும் தடுக்க முடியும் என்கின்றனர் தோல் மருத்துவர்கள். இயற்கையான முறையில் சருமத்தை அழகாக பார்த்துக்கொள்ள இது முதல் படி என்பது குறிப்பிடத்தக்கது.