Viral Photo: இணையவாசிகளை உறைய வைத்த 3 கருநாகங்களின் வைரல் படங்கள்

இந்தியாவின் அழகிய காடுகள் பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும்.  தற்போது, காட்டின் அரிய காட்சிகளை நமக்கு காண வாய்ப்ப்ய் கொடுத்துள்ள சமூக ஊடகங்களுக்கு நாம் நிச்சயம் நன்றி கூற வேண்டும். காடுகளில் கிளிக் செய்யப்பட்ட அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில திகிலை ஊட்டும் வகையில் உள்ளா. சில ஆச்சர்யத்தை கொடுக்கின்றன. 

1 /3

அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள காடு ஒன்றில் மூன்று நாகப்பாம்புகள் மரத்தில் சுற்றியிருக்கும் படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம், அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் மூன்று நாகப்பாம்புகள் மரத்தை சுற்று வளைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஐஎஃப்எஸ் அதிகாரி நந்தா படத்தைப் பகிர்ந்துகொண்டு, "ஆசீர்வாதம்... அதுவும் ஒரே நேரத்தில் மூன்று நாகப்பாம்புகள் உங்களை ஆசீர்வதிக்கிறது" என்று இந்த பதவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

2 /3

பாம்பென்றால், படையே நடுங்கும், அதுவும் கரு நாகம் என்றால் கேட்கவே வேண்டாம். அத்தகைய உயிரினங்களிலிருந்து விலகி இருக்கவே பலரும் விரும்புவார்கள் என்பதில் ஐயமே இல்லை...! இந்த புகைப்படம் வைரலாகி, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், ‘ புகைப்படத்தை பகிர்ந்ததற்கு நன்றி. இனச்சேர்க்கை காலத்தைத் தவிர 3 கரு நாகப்பாம்புகளை ஒன்றாகப் பார்ப்பது மிக அரிது. மற்ற பாம்புகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.  ஆனால் தனித்தன்மை வாய்ந்தது. பாம்புகள், உறக்கநிலையிலிருந்து வெளியேறி, இனப்பெருக்கம் செய்கின்றன. IFS ஊழியர்களுக்கு இயற்கையை நேரில் கண்டு களிக்கும் பாக்கியமும் உண்டு. அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என பகிர்ந்துள்ளார்.

3 /3

இந்த புகைப்படம் வைரலாகி, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், ‘ புகைப்படத்தை பகிர்ந்ததற்கு நன்றி. இனச்சேர்க்கை காலத்தைத் தவிர 3 கரு நாகப்பாம்புகளை ஒன்றாகப் பார்ப்பது மிக அரிது. மற்ற பாம்புகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.  ஆனால் தனித்தன்மை வாய்ந்தது. பாம்புகள், உறக்கநிலையிலிருந்து வெளியேறி, இனப்பெருக்கம் செய்கின்றன. IFS ஊழியர்களுக்கு இயற்கையை நேரில் கண்டு களிக்கும் பாக்கியமும் உண்டு. அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என பகிர்ந்துள்ளார்.