மின்சார கார்கள்: எப்படி வேலை செய்கின்றன? விவரம் இதோ

ஆல் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV-கள்) என்னப்படும் பேட்டரி மின்சார வாகனங்களில் உள் கம்பஷன் இயந்திரத்திற்கு பதிலாக மின்சார மோட்டார் இருக்கும். மின்சார மோட்டாரை இயக்குவதற்கு மின்சார வாகனங்கள் ஒரு பெரிய டிராக்ஷன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகின்றன. இது மின் மோட்டருக்கு பவரை அளிக்க உதவுகிறது. இதை ஒரு வால் அவுட்லெட் அல்லது சார்ஜிங்க் கருவியில் பிளக் இன் செய்ய வேண்டும். இது மின் வாகன சப்ளை சாதனம் எனப்படும் (EVSE). இது மின்சாரத்தில் இயங்குவதால், வாகனத்தில் டெயில்பைப்பில் இருந்து எதுவும் வெளியேற்றப்படாது. மேலும், இதில் எரிபொருள் பம்ப், ஃபூயல் லைன் அல்லது ஃபூயல் டேங்க் போன்ற திரவ எரிபொருள் கூறுகளும் இருக்காது.

1 /6

பேட்டரி (all-electric auxiliary): ஒரு மின்சார டிரைவ் வாகனத்தில், துணை பேட்டரி பவர் வெஹிகிள் பாககங்களுக்கு மின்சாரத்தை வழங்குகிறது.

2 /6

DC/DC கன்வர்டர்: இந்த சாதனம் டிராக்ஷன் பேட்டரி பேக்கில் இருந்து அதிக மின்னழுத்த DC பவரை குறைந்த வோல்டேஜ் டிசி பவராக மாற்றுகிறது. இது வாகன அக்சசரீஸ்களை இயக்கவும் துணை பேட்டரியை ரீசார்ஜ் செய்யவும் உதவுகிறது.

3 /6

ஆன்போர்டு சார்ஜர்: சார்ஜ் போர்ட் வழியாக வழங்கப்படும் உள்வரும் ஏசி மின்சாரத்தை எடுத்து அதை டிசி பவராக மாற்றி டிராக்ஷன் பேட்டரியை சார்ஜ் செய்கிறது. இது சார்ஜிங் கருவிகளுடன் தொடர்பு கொண்டு மின்னழுத்தம், மின்னோட்டம், வெப்பநிலை மற்றும் சார்ஜ் நிலை போன்ற பேட்டரி பண்புகளை கண்காணிக்கிறது.  

4 /6

தெர்மல் சிஸ்டம் (கூலிங்): இந்த அமைப்பு இயந்திரம், மின் மோட்டார், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற கூறுகளின் சரியான இயக்க வெப்பநிலை வரம்பை பராமரிக்கிறது.

5 /6

டிரான்ஸ்மிஷன் (மின்சாரம்): டிரான்ஸ்மிஷன் சக்கரங்களை இயக்க மின்சார டிராக்ஷன் மோட்டாரிலிருந்து இயந்திர சக்தியை மாற்றுகிறது.

6 /6

சார்ஜ் போர்ட்: டிராக்ஷன் பேட்டரி பேக்கை சார்ஜ் செய்வதற்காக, வாகனத்தை வெளிப்புற மின் விநியோகத்துடன் இணைக்க சார்ஜ் போர்ட் அனுமதிக்கிறது.