நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடைபெறுகிறது. நிர்வாகிகளுக்கு செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை கடந்த 2 ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியாக அறிவித்தார். கட்சி அறிவித்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி. ஆனந்த் தலைமையில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இன்று பணையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் தலைவர் விஜய் உத்தரவுப் படி உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.
மாநில பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர் மற்றும் பல்வேறு அணித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச உள்ளனர் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.