தற்கொலை குறித்து முன்பே கூறியுள்ள விஜய் ஆண்டனி!

Vijay Antony daughter suicide: நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

 

1 /5

12ம் வகுப்பு படித்து வரும் விஜய் ஆண்டனி மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.    

2 /5

அதிகாலை 3 மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் நிலையில், முதற்கட்ட தகவல் ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.    

3 /5

சமீபத்தில் மிகப்பெரிய விபத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்த விஜய் ஆண்டனிக்கு தனது மகளின் மறைவு மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

4 /5

சில வருடங்களுக்கு முன்பு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த போது, விஜய் ஆண்டனி தற்கொலை குறித்து கூறி உள்ளார். "இந்த இக்கட்டான நேரத்தில், ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்போம், மற்றவர்களுக்கு உதவ முன்வருவோம். சிறிய உதவி கூட மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.  

5 /5

விஜய் ஆண்டனிக்கு சினிமா பிரபலங்களும், அவரது ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.