ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா.. ஆகஸ்ட் 15 லிஸ்ட் பெருசா இருக்கே

Movies releasing on August 15 : நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதியை முன்னிட்டு இந்திய அளவில் வெளியாகப் போகும் டாப் படங்கள் எவை என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே பல படங்கள் வெளியான. சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை தொடர்ந்து ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில், நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சில படங்கள் வெளியாக உள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? 

 

1 /7

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், தங்கலான். இதில், நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி திருவோது, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார், இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம், நாளை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) திரையரங்குகளில் பார்க்கலாம். 

2 /7

தமிழில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நடிகை, கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம்தான் ரகு தாத்தா. இந்த படத்தில் கீர்த்தியுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், ரவிந்திர விஜய், ராஜீவ் ரவீந்த்ரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுமன் குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தி திணிப்பு குறித்து பேசும் இந்த படத்தில் கீர்த்தி கயல்விழி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

3 /7

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் திகில் திரில்லர் திரைப்படம் டிமான்ட்டி காலனி 2. இப்படத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடிக்க பிரியா பவானி ஷங்கர், வி ஜே அர்ச்சனா, அருண் பாண்டியன், ரெடின் கிங்ஸ்லி, ஷாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக திரையரங்கில் வெளியாகிறது.

4 /7

பைரதி ரணங்கள் - ஷிவ்ராஜ் குமார், ருக்மணி வசந்த், ஷபீர் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் கன்னட திரைப்படம், இப்படம் நாளை சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாக உள்ளது.  

5 /7

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பசில் ஜோசப், கிரேஸ் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரில்லர் மலையாள திரைப்படம் நுணாகுழி. இந்த படம் நாளை அதாவது சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாக உள்ளது.

6 /7

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், மிஸ்டர் பச்சன். க்ரைம்-ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் ரவி தேஜா, பாக்கியஸ்ரீ போர்ஸ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, நாளை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) திரையரங்குகளில் காணலாம். 

7 /7

பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், டபுள் இஸ்மார்ட். சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராம் பொத்தினேனி ந்ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பர் நடித்திருக்கிறார். சஜ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்த படம் நாளை வெளியாகிறது.