தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் - முழு லிஸ்ட் இதோ!

78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 26 பேரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பதக்கத்தை பெற உள்ளனர்.

1 /8

தனிச்சிறப்புடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.   

2 /8

அந்த வகையில், நாடு முழுவதும் 78ஆவது சுதந்திர தினம் நாளை (ஆக. 15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவர் பல்வேறு அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்க உள்ளார்.   

3 /8

இதில் காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு படை, சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.    

4 /8

இதில், குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான விருதுகளுக்கு தமிழ்நாடு காவல் துறையில் 23 பேரை  மத்திய அரசு அறிவித்துள்ளது.  

5 /8

மேலும், ஊர்க்காவல் படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கம் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

6 /8

21 பேர்: ஐஜி என். கண்ணன், ஐஜி ஏ.ஜி. பாபு , காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினாபு, காவல்துறை கண்காணிப்பாளர் கே. ஃபெரோஸ் கான் அப்துல்லா, காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமார் , காவல்துறை கண்காணிப்பாளர் எம். கிங்ஸ்லின், காவல்துறை கண்காணிப்பாளர் வி. ஷியாமளா தேவி, காவல்துறை கண்காணிப்பாளர் கே. பிரபாகர், காவல்துறை கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கே. ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பி. சந்திரசேகர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எல். டில்லிபாபு, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆர். மனோகரன், துணை காவல்துறை கண்காணிப்பாளர் சி. சங்கு சி, எம். ஸ்டீபன் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் பி. சந்திர மோகன், காவல் ஆய்வாளர் எம். ஹரிபாபு, காவல் ஆய்வாளர் ஆர்.தமிழ்செல்வி, காவல் உதவி ஆய்வாளர் டி.கே. முரளி, காவல் உதவி ஆய்வாளர் என். ரவிச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் ஜி. முரளிதரன் - ஆகிய 21 பேருக்கு மெச்சத்தகுந்த சேவைக்கான பதக்கம் (Medal For Meritorious Services - MSM) வழங்கப்பட இருக்கிறது. (புகைப்படம்: வலது - ஐஜி என். கண்ணன், இடது - ஐஜி ஏ.ஜி. பாபு)  

7 /8

2 பேர்: காவல்துறை இயக்குனர் , கூடுதல் இயக்குநர் ஜெனரல் அபின் தினேஷ் மோடக் ஆகியோருக்கு மெச்சத்தகுந்த சேவைக்கான ஜனாதிபதி விருது (President's Medal For Distinguished Services - PSM) வழங்கப்படுகிறது. (புகைப்படம்: வலது - கே. வன்னிய பெருமாள், இடது - கூடுதல் இயக்குநர் ஜெனரல் அபின் தினேஷ் மோடக்)  

8 /8

3 பேர்: ஊர்க்காவல் படையை சேர்ந்த கம்பெனி கமாண்டர் எம். மூர்த்தி, பிளாட்டூன் கமாண்டர் எஸ். கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பின் அன்பியா ஆகிய மூவருக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்க உள்ளார்.