ஆண் மயில்கள் கண்ணைக் கவரும் வண்ணத்திலும், அழகான அலங்காரமான வால் இறகுகளைக் கொண்டுள்ளன.
ஆண் மயிலுக்கு மட்டுமே நீளமான, அழகான இறகுகள் இருக்கும். மயில்களின் வால் இறகுகள் வளர மூன்று வருடங்கள் ஆகும். ஆண்மயிலின் இறகுகள் பெண் மயில்களை ஈர்க்கும்.
மயில் தோகை பார்ப்பதற்கு அழகாக இருக்கும், இவை தன் தோகைகளை விரித்து ஆடுவது பெண் மயிலைகளை ஈர்க்கின்றன. மேலும் இவை வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க தோகையை விரிக்கின்றது.
மயில்களின் இறகுகளை போலவே அவை தலையில் உள்ள முகடுகள் அழகாக இருக்கும். பெண் மயில்கள் இவற்றை சென்சார்களாக பயன்படுத்துகிறது. இது மயில்களின் இனச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மயில்கள் பறக்கும் மயில்களின் வால் இறகுகள் கனமாக இருந்தாலும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிறிது தூரம் பறக்கின்றன. (Photo Credits: Dr.Samrat Gowda IFS)