டி20 உலக கோப்பையில் பெரிய அணிகளுக்கு ஷாக் கொடுக்கும் கத்துக்குட்டி அணிகள்

டி20 உலக கோப்பையில் கத்துக்குட்டி அணிகள் எல்லாம், உலக கோப்பையை வென்ற அணிகளை வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.

டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டியில் சில கத்துக்குட்டி அணிகள் முன்னாள் டி20 உலக கோப்பை சாம்பியன்களையே வீழ்த்திவிட்டன.

 

1 /9

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதன்முறையாக கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது.

2 /9

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 

3 /9

இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்திவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சிகரமாக அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுக்க, அமெரிக்கா அணியும் 159 ரன்கள் எடுத்தது

4 /9

இதனால் இந்தப் போட்டி டையில் முடிந்து சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணி நிர்ணயித்த ரன்களை எடுக்க முடியாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. 

5 /9

இதேபோல் மற்றொரு கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி, நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

6 /9

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக அடியெடுத்து வைத்திருக்கும் கனடா அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

7 /9

இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது

8 /9

மற்றொரு போட்டியில் வங்கதேசம் அணி முன்னாள் டி20 உலக கோப்பை சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.  

9 /9

இதனால் இந்த டி20 உலக கோப்பை தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது