தினமும் 6 மிளகு போதும்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

கருமிளகு  உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக  பலன்களை கொடுக்கிறது. தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம்.

எந்த உணவிலும் சிறிது கருமிளகை சேர்த்தால், அதன் சுவை இரட்டிப்பாகும். கருப்பு மிளகு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், பலர் சாப்பிடும் போது அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள். 

1 /7

தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 6 கருமிளகுடன் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்தி வர வியக்கத்தக்க பலன்களை பெறலாம். 

2 /7

கருப்பு மிளகை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

3 /7

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.   

4 /7

மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும். 

5 /7

கருமிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்திற்கு எதிர் பொருளாக  செயல்படுகிறது. அதோடு எலும்புகள் வலுவடைய உதவுகிறது.  

6 /7

ஆஸ்துமாவிற்கு நிரந்திர தீர்வு கிடைக்க, மிளகு கஷாயம் அருமருந்து.  அதோடு சளி தொல்லை, கபம் போன்றவற்றை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதகரிக்கிறது. சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.