வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!

TVK Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம். 

  • Aug 19, 2024, 17:52 PM IST

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புது அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து தனது கட்சி செயல்படும் என அன்றே அறிவித்த நிலையில், தற்போது வெளியாக உள்ள The GOAT மற்றும் இன்னொரு படத்தோடு தனது திரை வாழ்வுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க அவர் திட்டமிட்டுள்ளார். 

 

 

 

1 /8

பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தற்போது வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

2 /8

வரும் ஆக. 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி, கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   

3 /8

இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.   

4 /8

கொடி அறிமுகம் நிகழ்ச்சி வரும் ஆக. 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சி எவ்வித பிரச்னையும் இன்றி சிறப்பாக நடைபெற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

5 /8

அந்த வகையில், ஆக. 22ஆம் தேதி நிகழ்ச்சியில் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு ஒத்திகை பார்க்க நடிகர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

6 /8

தானே கார் ஓட்டிக்கொண்டு அலுவலகம் வந்த விஜய், ஒத்திகை பார்க்கும் விதமாக அக்கட்சியின் கொடியை இன்று ஏற்றியதாக நிர்வாகிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகின.   

7 /8

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் புகைப்படங்கள் வெளியாகின. மஞ்சள் நிறத்தில், விஜய்யின் முகம் நடுவே பொறிக்கப்பட்ட வகையில் அக்கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதான் அதிகாரப்பூர்வ கொடியா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது ஒத்திகைக்காக ஏற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   

8 /8

வரும் செப். 5ஆம் தேதி நடிகர் விஜய்யின் The Greatest Of All Time திரைப்படம் வெளியாகி உள்ளது. இதை தவிர்த்து இன்னும் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் விஜய் நடிக்க உள்ளார். அதன்பின் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு அவர் தயாராக இருப்பதால் அடுத்தடுத்து கட்சி மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பயணம் உள்ளிட்டவற்றை நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.