பிறரை அவமானப்படுத்துவது வெற்றியல்ல, மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இன்னும் ஆழமாகிறது என்றே அர்த்தம்.
பிறரை அவமானப்படுத்துவது என்பது உங்களின் சிந்தனை, குணாதிசயம் எதிர்மறை வழியில் செல்கிறது என்றே பொருள். அதனால், இந்த குணாதிசயம் உங்களை மற்றவர்களிடம் இருந்து தூரப்படுத்தும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் தான் பிறரை காயப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இன்மை, சொந்த எண்ணங்களை கையாளத் தெரியாமை ஆகியவை வெறுப்பாக வெளிப்படும்.
பிறரை மதிக்க தெரியாதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கவே இருக்காது. நீங்களும் பிறரை அவமதிக்கும் குணாதிசயம் கொண்டவராக இருந்தால் உங்களின் நிலை மேம்படவே செய்யாது. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் குறைந்த நெருக்கம் மட்டுமே இருக்கும்.
நீங்கள் பிறரை வசைபாடும்போது, உங்கள் அன்புக்குரியவர்களும் சேர்ந்தே காயப்படுவார்கள். நீங்கள் வெறுக்கும் நபர் உங்களை காயப்படுத்த உங்களுக்கு நெருக்கமானவர்களையும் சேர்ந்து காயப்படுத்த விரும்புவார்கள்.
இந்த சூழ்நிலையை உங்களால் எதிர்கொள்பவர்கள் கூட உங்களையே நொந்து கொள்வார்கள். உங்களின் குணாதிசயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அந்த நொடியில் உங்களுக்கு இதை கேட்கும் மனப்பக்குவம் இருக்க வாய்ப்பில்லை. மேலும், உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஆக்கிரமித்து பழிவாங்கும் உணர்ச்சிகள் கூட மேலோங்க வாய்ப்பு இருக்கிறது.
பிறரை காயப்படுத்திக் கொண்டே இருந்தால் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட உங்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் என்பு என்ற ஒன்று உங்களை விட்டு நீண்ட தூரம் விலகி சென்று இருக்கும்.
அன்பு, பிறரின் ஆசைகளுக்கு மதிப்பளித்தல், சகோதரத்துவம் எல்லாம் காணமல் போய் இருக்கும். இந்த உன்னத உணர்வுகள் உங்களுக்கு என்னவென்றே தெரியாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது.
அதனால் பிறரை எப்போதும் காயப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள். காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்தவே வேண்டாம். இக்கட்டான சூழல்களில் இருக்கும்போது அமைதியை கடைபிடிக்கவும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
உணர்ச்சிகளை நிர்வகித்து சொற்களை நிதானமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இதனை செய்யவில்லை என்றால் வாழ்க்கை உங்களுக்கு கசப்பானதாகவே இருக்கும்.
காதல், நன்றியுணர்வு எல்லாம் பிறரை மதிக்கும்போது மட்டுமே வரும். அன்பு தான் இறுதியில் வெற்றி பெறும் என்பதை நினைவில் கொண்டீர்கள் என்றால் உங்களிடம் இருந்தும் வெறுப்பு ஓடிவிடும்.