சனி வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசியினருக்கு பணம், பதவி, கௌரவம் கிடைக்கும்

Shani Vakri on Khumbh: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரித்தாலும், கடந்த மாதம் அவர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இந்த வக்ர நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வரையில் இருக்கும். இதனால் சில ராசியினருக்கு பணம், பதவி, கௌரவம் கிடைக்கும்.

கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான் ஆவார், இவர் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியிலேயே ஆட்சி, அதிபதியாக சஞ்சரித்தார். தற்போது இவர் ஜூன் 17 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியை மேற்கொண்டு வருகிறார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.45 வரை வக்ர நிலையில் இருக்கு சனி, அதன் பின்னர் நேர்மறையான நர்வை மேற்கொள்ளத் தொடங்குவார். இந்த காலத்தில் எந்த ராசியினருக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

 

1 /6

ரிஷப ராசி: உங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவார். வேலையில் திருப்தியும், லாபகரமான வாய்ப்புகளையும் பெறலாம். தொழில் முயற்சிகளில் வெகுமதியைப் பெற வாய்ப்புள்ளது. மன நிம்மதி கிடைக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.  

2 /6

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு, வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபார முயற்சிகள் மகிழ்ச்சியை தரும். வீட்டில் சுபகாரியங்களில் நடக்கும்.  

3 /6

விருச்சிக ராசி: உங்களுக்கு வரும் பிரச்சினைகள் இடையூறுகளை எளிதில் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும்.  

4 /6

தனுசு ராசி: மாணவர்கள் சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும். சுப விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். 

5 /6

மகர ராசி: உங்களுக்கு வேலைகளில் வெற்றியைத் தரும். நிதிநிலைமை நன்றாக இருக்கும். தடைப்பட்ட பணிகள் அனைத்து நிறைவேறும். உத்தியோகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வை நீங்கள் இப்போது பெறுவீர்கள்.  

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.