2025 மே 18ஆம் தேதி அன்று சரியாக மாலை 4:30 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும் மற்றும் கேது சிம்ம ராசிக்கும் இடம்பெற உள்ளது. இந்த இடம் பெயர்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப்போகிறது அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழலாம்.
பின்னோக்கி செல்லக்கூடிய ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறது. இதில் இந்த ஆண்டு இந்த கிரகங்கள் மே 18ஆம் தேதி உடற்பயிற்சி செல்ல உள்ளன. இந்த இடம் பேச்சு காரணமாகக் குறிப்பிட்ட சில ஐந்து ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் விரைவு காலம் பிறக்கப் போகிறது.
ராகு கேது இடம்பெயர்தல் என்பது சில ராசிகளுக்கு நன்மையும் அளிக்கலாம் மற்றும் சில ராசிகளுக்குத் தீமையும் அளிக்கலாம்.
ராகு கேது இடம் பெயர்ச்சியில் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்குச் சிறப்பான நன்மை பயன்கள் உண்டாகும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதனைப் பற்றி கீழே பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க அதிகம் வாய்ப்பு உண்டு. இந்த கிரக மாற்றத்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். உங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் அனைத்திற்கும் உங்கள் உறவுகள் துணை நிற்கும்.
மிதுன ராசிகளுக்கு இந்த இடம்பெயர்தல் காரணமாகப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழில் அல்லது வீடு, நிலம் போன்றவை வாங்க அதிகமான வாய்ப்பு உண்டு. இந்த இடம் பெயர்கள் காரணமாக உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக மாறப்போகிறது.
விருச்சிக ராசிக்காரர்களுக்குச் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். செல்வம் தேடி வரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் அடைவீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான செய்திகள் தேடி வரும். நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக அமையும். வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். எதிரிகளை வெல்லச் சரியான நேரம். போட்டிகளைச் சமாளிக்க மன தைரியம் அதிகரிக்கும்.
மீனம் ராசிக்காரர்களுக்குப் பல விதத்திலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திச் சேமிப்பை அதிகரிக்கத் தொடங்க வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சி, புகழ் அனைத்தும் தேடி வரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.