Mid Size SUV வாங்கணுமா? உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருந்தும் சூப்பர் கார்களின் பட்டியல்!!

Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.  

 

நீங்கள் 15 லட்சம் என்ற பட்ஜெட்டில் ஒரு எஸ்யூவி வாங்க நினைத்தால், சந்தையில் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் விருப்பப்படி காரை தேர்வு செய்யலாம். சில நடுத்தர அளவிலான எஸ்யூவிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இது நீங்கள் உங்க்களுக்கேற்ற காரை தேர்ந்தெடுக்க உதவும்.

1 /5

கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், நடுத்தர அளவிலான எஸ்யூவி கிரேட்டாவை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் ஆகும். இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .10,16,000 முதல் ரூ .17,78,000 வரை உள்ளது.  

2 /5

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகியின் (Maruti Suzuki) நடுத்தர அளவிலான எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மிக பிரபலமான கார் ஆகும். இதுவும் நன்கு சோதிக்கப்பட்ட எஸ்யூவி. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,51,500 முதல் ரூ .11,25,500 வரை உள்ளது.

3 /5

ஃபோர்டு மோட்டர்ஸின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் நடுத்தர அளவிலான எஸ்யூவியாக சந்தையில் ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இது பல்வேறு வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் ஸ்போர்ட்டி தோற்றத்தில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .8,19,000 ஆகும்.  

4 /5

இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வந்து நீண்ட காலம் ஆகவில்லை, ஆனால் அது பிரம்மாண்டமாக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவியான செல்டோஸ் உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கலாம். இதில் நீங்கள் பல சிறந்த அம்சங்களையும் பெறுவீர்கள். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 9.95 லட்சம் ஆகும்.

5 /5

மஹிந்திராவின் மஹிந்திரா XUV300 நடுத்தர அளவிலான SUV, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. இதன் புனே எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,95,963 முதல் ரூ .11,70,705 வரை உள்ளது.