இந்த மாவுகளை பயன்படுத்திப் பாருங்க! கொலஸ்ட்ராலும் சர்க்கரையும் சட்டுன்னு குறையும்

Flours For Healthy Life: இன்றைய அவசர காலத்தில் பல்வேறு நோய்களும் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. ஆரோக்கியமும், அழகும் குறைவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான். நமது உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்   

நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், லோ-கிளைகெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும், அது தான் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால், நமது தினசரி உணவில் இவை அனைத்தும் உள்ளதா? நமது தென்னிந்தியர்களின் பொதுவான பழக்கத்தின்படி, அரிசி பருப்பு போன்றவற்றை ஒரே வகையையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

உதாரணமாக சாம்பார் என்றால் அதற்கு பெரும்பாலும் ஏன் 95% துவரம்பருப்பு தான் பயன்படுத்துகிறோம். அரிசி, கோதுமை என தானியங்களையும் தேர்ந்தெடுத்தே உண்கிறோம். பிற தானிய வகைகள், சிறுதானியங்கள், பயறுகளின் பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பது தான் நாம் ஆரோக்கியத்தை இழப்பதற்கான காரணங்களில் முக்கியமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 /9

அதிலும் குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன், அதிக கொழுப்பு, ரத்தக் கொதிப்பு என பலருக்கும் பல்வேறு நோய்கள் பாதிக்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணும் தானியங்கள், காய்கனிகள் மற்றும் உணவுகள் தான். அதிலும் உடல் எடையை குறைத்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது. எனவே இதற்கான முதல்  முயற்சியாக, அரிசி கோதுமை மாவுகளைத் தவிர இந்த சில மாவுகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

2 /9

முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதைப் போல, நாம் சப்பாத்தி, தோசை என பலவிதமான பலகாரகங்களுக்கும் மாவை பயன்படுத்துகிறோம்

3 /9

மாவுகள், அது தயாரிக்கப்படும் தானியத்தின் ஊட்டச்சத்து மதிப்பை கொண்டிருக்கின்றன. அவற்றை சரியாக, சமச்சீராக பயன்படுத்தினால் ஆரோக்கியம் உங்கள் வசம் தான்...

4 /9

பொதுவாக சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவு தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக, மல்ட்டிகிரைன் எனப்பதும் பல தானியங்களின் கலவையில் தயாரிக்கப்பட்ட மாவை பயன்படுத்துங்கள்

5 /9

சர்க்கரை நோய் முதல் பல்வேறு நோய்களுக்கும் உணவே மருந்தாக இருக்கிறது என்றால், அதில் முதலிடத்தில் இருப்பது ராகி. கேழ்வரகு என்றும் அறியப்படும் ராகியில், பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது நேரடியாக நீரிழிவு நோயை எதிர்த்து போராடும். குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு இரண்டையும் குறைக்கும் மூலக்குகுறுகளை கொண்ட ராகியில் இருந்து விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம். கஞ்சி, ராகிக்கூழ், அடை, தோசை, இட்லி, பகோடா என கேழ்வரகு மாவைப் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை சமைத்து உண்ணலாம்

6 /9

உலர வைத்த தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் மாவு தேங்காய்ப் பால் தயாரிப்பின்போது கிடைக்கும் உப பொருள் ஆகும். தேங்காய் மாவில் போதுமான நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த தேங்காய் மாவு, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

7 /9

ஓட்ஸில் நார்சத்து நிறைந்திருக்கிறது. மிகக் குறைவான கலோரி கொண்ட உணவுவானஓட்ஸ் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. ஓட்ஸ் மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவை 

8 /9

கொண்டைக் கடலைமாவை, கோதுமை மாவைப்போலவே பலவிதமான உணவுகளை சமைக்க பயன்படுத்தலாம். இதில் மிக குறைவான கிளைகெமிக் இன்டெக்ஸ் இருப்பதுடன், நீரில் கரையக்கூடிய நார்சத்தும் உள்ளது. அதிக புரதச்சத்துள்ள இந்த மாவு, இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரித்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

9 /9

மல்டிகிரைன் என்பது பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து கிடைக்கும் மாவு ஆகும். ரெடிமேடாகவே கடைகளில் கிடைக்கும் இந்த மாவை, முழு தானியங்களை வாங்கி மாவாக அரைத்தும் பயன்படுத்தலாம். மல்டி க்ரைன் மாவில் உடலுக்கு தேவையான நார்சத்து, வைட்டமின் மற்றும் லோ கிளைகெமிக் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. மேலும், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் இணைந்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன