IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஏன் இடம்பெறுவார்? 6 காரணங்கள்

உலக கோப்பை 2023 முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா

 

1 /9

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது  

2 /9

இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் குல்தீப் விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது.  

3 /9

அஸ்வின் ஏன் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.   

4 /9

ரவிச்சந்திரன் அஸ்வின் டேவிட் வார்னருக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரை 11 முறை வெளியேற்றியுள்ளார்.   

5 /9

இதேபோல், ஸ்டீவ் ஸ்மித்தும் அஸ்வினை எதிர்கொள்வதில் கஷ்டப்படக்கூடியவர். இது உலக கோப்பை போட்டியிலும் தொடர வாய்ப்பு இருக்கிறது  

6 /9

சென்னையின் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த சூழ்நிலையில், அஸ்வினின் ஆஃப் ஸ்பின் வலிமையான ஆயுதமாக இருக்கும். அவரது அனுபவமும் திறமையும் அவரை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.  

7 /9

அஸ்வினின் பேட்டிங் திறமை குறை சொல்ல முடியாது. ஓரளவுக்கு சிறப்பாக விளையாடக்கூடியவர். இதுவும் இந்திய அணிக்கு உதவ வாய்ப்பு இருக்கிறது.  

8 /9

இப்போது, இந்திய அணியில் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், அஷ்வினின் ஆஃப்-ஸ்பின் மிகவும் தேவையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  

9 /9

சென்னை அஸ்வினுக்கு சொந்த ஊர். சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் விளையாடும்போது இன்னும் கூடுதல் உற்சாகத்தோடு அவர் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க வாய்ப்பு உள்ளது.