IPL Mini Auction : மினி ஏலத்தால் கோடீஸ்வரராக போகும் 5 இந்திய வீரர்கள் - யார் யார் தெரியுமா?

வரும் டிச. 23ஆம் தேதி, ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளது. இதில், பலரும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் மீது கவனம் குவித்து வரும் நிலையில், சில இந்திய வீரர்கள் மீதும் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், இந்த மினி ஏலத்தில் கோடிக்கணக்கில்  ஏலம் போக வாய்ப்புள்ள டாப் 5 இந்திய வீரர்கள் குறித்து இதில் காண்போம். 

  • Dec 15, 2022, 22:14 PM IST

 

 

 

 

 

 

 

 

 

 

1 /5

ப்ரியம் கர்க், 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன். அவருக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு திடமான வீரர் வேண்டும் என்பதால் அவரை வாங்கியது, தற்போது விடுவித்துள்ளது. அவர்களுக்கு ப்ரியம் கர்க் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை. ஆனால், ப்ரியம் இன்னும் அதே திறமையைக்கொண்டிருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு Uncapped வீரராக வரும் ஏலத்தில் அவர் பெரிய தொகைக்கு ஏலம் போவார். 

2 /5

மயங்க் அகர்வால் தனது அடிப்படை விலையை ரூ. 2 கோடியில் இருந்து, ரூ.1 கோடியாக குறைத்துள்ளார். குறைந்தபட்சம் ஒரு கோடி அவருக்கு கிடைக்கும் என்பதால், புத்திசாலித்தனமாக இதனை அவர் செய்துள்ளார். ஏனென்றால், அவரை அந்த தொகைக்கு முதலில் யாரும் எடுக்கமாட்டார்கள் என்பதால். ஆனால், சிறந்த தொடக்க வீரரான அவரை எடுக்க சில அணிகள் காத்திருக்கின்றன. கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர் தலைமை தாங்கியதால், அவருக்கு சிறப்பான வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் அவரால் ஒரு பேட்டராக கலக்க முடியும். 

3 /5

முகமது அசாருதீன் ஒரு அரிய திறமைசாலி என்றுதான் சொல்ல வேண்டும். அடித்து ஆடும் திறன்தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. கேரளாவைச் சேர்ந்த இவர் நல்ல தொகைக்கு ஏலம் போவார் என கணிக்கப்படுகிறது. மேலும், ரூ. 20 லட்சத்திற்கு அவரின் அடிப்படை தொகை இருப்பதால், ராஜஸ்தான் அணி நிச்சயம் அவர் மீது கண்வைத்திருக்கும். இவர் சுமார் ரூ. 1 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது.

4 /5

மனீஷ் பாண்டே 2022இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒரு மோசமாக விளையாடிருந்தார், இருப்பினும் அது அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. அவர் ஒரு திடமான மிடில் ஆர்டர் பேட்டர். இவரின் அடிப்படை விலையும் ஒரு கோடி ரூபாய் தான். மனீஷ் கோப்பைகளை வென்ற அனுபவத்தோடு இருப்பவர். மேலும்  மோசமான ஃபார்மில் அவர் இருந்தபோதிலும், நிச்சயமாக அவர் ஏலம் போவார்.

5 /5

இஷாந்த் ஷர்மா இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அவர் அனுபவம் நிறைந்த வீரர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டார். ரிக்கி பாண்டிங் அவரை மீண்டும் பெற விரும்பலாம். அவர் இந்திய சூழலில் ஒரு ஆபத்தான பந்துவீச்சாளர். வரும் ஐபிஎல் தொடர் இந்தியாவில் விளையாடப்படுகிறது. இஷாந்தின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம். அவரை எடுக்க இரண்டு அணிகள் போட்டியிட்டாலே தொகை ஒரு கோடியை தாண்டும்.