கொலஸ்ட்ரால் அளவை சட்டுபுட்டுன்னு குறைக்கும் உணவுகள்! வாரம் 4 முறை போதும்!

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்கள், நரம்பு நோய்கள், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படலாம்.

1 /8

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவு மற்றும் பானங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. நமது கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது

2 /8

கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, ஆனால் அது அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்

3 /8

உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது என்பது பல நோய்களை தவிர்க்கவும் அவசியம். கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்திருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்

4 /8

ஓட்ஸ் உணவில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது, இது நமக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள பயோஃப்ளவனாய்டுகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.  

5 /8

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் உள்ள வெந்தயம், கெட்ட கொழுப்பை நேரடியாக தாக்கி கொலஸ்ட்ராலை அதிரடியாக குறைக்கும்  

6 /8

நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் உதவியுடன், இது கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

7 /8

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

8 /8

கிரீன் டீயில் உடல் எடையைக் குறைக்க, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல கூறுகள் உள்ளன.