சோர்வு மற்றும் பலவீனம் நீங்க, உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்.
சோர்வு அல்லது பலவீனம் நமது வேலைத் திறனை பாதித்து, நமது முன்னேற்றத்தை பாதித்து விடும். எனவே, எப்போது ஆற்றலுடன் இருக்க ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் சில உணவுகளை எடுத்துக் கொள்வது பலன் தரும்.
எப்போதும் சோர்வு அல்லது பலவீனத்தால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது சிறந்த பலன் தரும்.
குயினோவா (Quinoa) கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த ஒரு முழு தானியமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.
வாழைப்பழம் பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளின் சிறந்த மூலமாகும். இது உட்கொள்ளும் போது உடனடி ஆற்றலை வழங்குகிறது.
உலர் பழங்களில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இது தசை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. அவற்றை உண்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.
தயிரில் அதிக புரதம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் ஆற்றலை வழங்குகிறது. இதில் பி வைட்டமின்கள் மற்றும் கால்சியம் உள்ளது.