Hair Care Tips: பலருக்கு தனது முடி கருகருவென வேகமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக எந்த டிப்ஸை பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ் இதோ!
முடி வளர்ச்சி குறித்த விழிப்புணர்வும் அது குறித்த புரிதலும் பலருக்கு அதிகரித்துள்ளது. கால சூழ்நிலைகளினாலும், காற்றில்கலந்துள்ள மாசுக்களாலும் முடி வளர்ச்சி பாதிப்படைகிறது. அதையும் மீறி சில விஷயங்களை ஃபாலோ செய்தால் முடி வேகமாக வளரும் என்கின்றனர், மருத்துவர்கள்.
முடி அதிகமாக வளர்வதற்கு, பரம்பரை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணத்திற்கு உங்களது தாத்தா அல்லது பாட்டிக்கு கருகருவென முடி வளர்ந்திருந்தால் உங்களுக்கும் அந்த அளவிற்கு முடி இருக்கும்.
சியா விதைகளில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருக்கிறது. இது, மயிர்கால்களை பலமாக்க உதவும். ஒரு ஸ்பூன் சியா விதைகளை தயிரில் கலந்து காலை உணவாக சாப்பிடலாம். இந்த விதைகளை சாப்பிடுவதற்கு முன்னர் 15-20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
மிகவும் சுவையான பழங்களுள் ஒன்று, அவகேடோ. அது மட்டுமல்ல, இவை உங்களின் முடி வளரவும் உதவும். இதில், வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். அவகேடோ பழத்தை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பூ வைத்து தலையை அலச வேண்டும்.
யோகா ஆசனங்களால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் நிகழ்கின்றன. அப்படி நன்மை தரும் யோகாசனங்களுள் ஒன்று, யோகேந்த்ர சக்ரா. இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் ஆக்சிஜனின் அளவும் அதிகரிக்கும்.
தலையணையின் உறைகளுக்கும் முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், கடினமாக இருக்கும் தலையணை உறைகளால் முடி உடையவும் முடி உதிரவும் வாய்ப்புகள் இருக்கிறது. சில்க், சாட்டின் வகை தலையணையை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடியில் சிக்கல் ஏற்படும்.
தலைமுடி, மெல்லிய பூ போன்றது. அதனால் அதை சரியான முறையில் கையாள வேண்டும். தலை முடியை சிக்கு எடுக்கையிலும் மென்மையாக கையாள வேண்டும். பெரிய பல் சீப்பை வைத்து தலை முடியை சிக்கெடுக்க வேண்டும். அப்போதுதான் சீராக சிக்கெடுக்க இயலும்.