Tech Tips: செயலிகள் எப்போதும் லொகேஷனை ட்ராக் செய்யாமல் இருக்க வேண்டுமா... இதை செய்யுங்க

இது ஸ்மார்ட்போன்களின் காலம். இதில் பல நன்மைகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும், இதில் சில குறைபாடுகள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் தானே. ஸ்மார்போனில் உள்ள சில செயலிகள்,  சில ரகசிய தகவல்களை வெளிப்படுத்தலாம். இவற்றில் ஒன்று இருப்பிட கண்காணிப்பு எனப்படும் ட்ராக்கிங் லொகேஷன். இந்த செயலிகள் உங்களை கண்காணிக்காமல் இருக்க சில டிப்ஸ்.

 

1 /6

உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் இருப்பிடத்தை எந்த செயலிகள் கண்காணிக்கிறது என்பதை முதலில் கண்டறியவும்.

2 /6

சில செயலிகள் வழிசெலுத்தல் மற்றும் பிற நோக்கங்களுக்காக உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கும். அத்தகைய செயலிகள் உங்கள் இருப்பிடத் தரவிற்கு Google மேப்பை பயன்படுத்துகின்றன. பல சந்தர்ப்பங்களில், இருப்பிட கண்காணிப்பு முற்றிலும் தேவையற்றது. இருப்பினும், செயலிகள் மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கிறார்கள். அத்தகைய செயலிகள் பயன்பாட்டில் இல்லாதபோது உங்கள் இருப்பிடத்தை கண்காணிப்பதை முடக்குவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

3 /6

உபெர் மற்றும் ஓலா உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறோம். உபெர் மற்றும் ஓலா போன்ற செயலிகள் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க வேண்டிய தேவி உள்ளது. அதன் மூலம் தான் ஓட்டுநர்கள் எங்கு வர வேண்டும் என்பதை அறியலாம். ஆனால் அதே நேரத்தில், இந்த செயலி நீங்கள் இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்கும். எனவே இந்த செயலிகள் தேவைப்படும் போது மட்டும் இருப்பிடத்தை கண்காணிக்குமாறு செட்டிங்கில் மாற்றவும்.

4 /6

Netflix மற்றும் Prime Video போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளும் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும். உங்கள் இருப்பிடத்தில் கிடைக்காத உள்ளடக்கத்தை அவர்கள் உங்கள் அணுகலில் இருந்து அகற்ற முடியும்.

5 /6

நீங்கள் விரும்பினால், எல்லா செயலிகளுக்கும் இருப்பிட அணுகலை முடக்கலாம். ஆனால் அவற்றில் பல வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்தலாம். எனவே, இருப்பிடத் தரவை எவ்வாறு தடுப்பது என்பதை அறிவது மிகவும் முக்கியம். இதற்கு முதலில் அமைப்புகளுக்குச் செல்லவும். "ஆப்கள் மற்றும் நோடிபிகேஷன்" ஆப்ஷனை கிளிக் செய்யவும். "ஆப் பர்மிஷன்" என்பதைக் கிளிக் செய்யவும். கீழே ஸ்க்ரோல் செய்து "லொகேஷன்" விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு, உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் செயலிகளின் பட்டியலைக் காண்பீர்கள். தேவை இல்லை என்றால் அது கண்காணிப்பதை நிறுத்தலாம்.

6 /6

iOS  ஐபோனில் இருப்பிட கண்காணிப்பை முடக்க அல்லது சில ஆப்ஸைத் தடுக்க விரும்பினால், செட்டிங்க்ஸ் > பிரைவஸி > லொகேஷன் சர்வீசஸ் என்பதற்குச் செல்லவும், அங்கு லொகேஷன் சர்வீசஸ்களை முடக்கும் விருப்பம் அதில் உள்ளது.